உக்ரைன் நாட்டில் தவிப்பவர்களை மீட்க தூத்துக்குடி மாவட்ட தொடர்பு அலுவலர் நியமனம் - ஆட்சியர் செந்தில்ராஜ் தகவல்!


உக்ரைன் நாட்டில் சிக்கி தவிப்பவர்கள் தொடர்பு கொள்வதற்காக தூத்துக்குடி மாவட்டத்துக்கு தொடர்பு அலுவலர் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக ஆட்சியர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ஆட்சியர் செந்தில்ராஜ் வெளியிட்ட செய்திக்குறிப்பு: உக்ரைன் நாட்டில் சிக்கி தவிப்பவர்கள் தொடர்பு கொள்வதற்காக தூத்துக்குடி மாவட்ட தொடர்பு அலுவலராக மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) அமுதா நியமிக்கப்பட்டுள்ளார். 

அவரது தொலைபேசி எண் : 9445008155 மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டுப்பாட்டு அறை எண் : 0461-2340101, 2340603 ஆகிய எண்களில் உக்ரைன் நாட்டில் சிக்கி தவிக்கும் தமிழகத்தை சேர்ந்த மாணவர்கள் மற்றும் புலம்பெயர்ந்த குடும்பத்தினர் தொடர்பு அலுவரை தொடர்பு கொண்டு விவரங்களை தெரிவிக்கலாம்.

மேலும், தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வு ஆணையராக ஜெசிந்தா லாசரஸ், அவர்களது தொலைபேசி எண்கள் 9445869848, 9600023645, 9940256444 மற்றும் மாநில கட்டுப்பபாட்டு மையத்தின் கட்டணமில்லா தொலைபேசி எண் : 1070 ஆகியவற்றை தொடர்பு கொள்ளலாம் என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ், தெரிவித்துள்ளார்.

Previous Post Next Post