பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு கனிமொழி கருணாநிதி எம்.பி, அமைச்சர் கீதாஜீவன் ஆறுதல்.!*


தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள துறையூரில் செயல்பட்டு வரும் பட்டாசு ஆலையில் கடந்த சில தினங்களுக்கு முன் ஏற்பட்ட வெடி விபத்தில் ராமர், ஜெயராஜ், கண்ணன், தங்கவேல் ஆகிய 4 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். 


இந்நிலையில் 4 தொழிலாளர்கள் குடும்பத்தினருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்து அவர்களது குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து நிவாரண உதவி வழங்கப்படுவதாக தெரிவித்துள்ளார். 

இந்நிலையில் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி, சமூக நலன் - மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதாஜீவன்,  ஆகியோர் மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், முன்னிலையில், 

கோவில்பட்டி பட்டாசு தொழிற்சாலை வெடி விபத்தில் உயிரிழந்த ஜெயராஜ் குடும்பத்திற்கு இன்று  நேரில் ஆறுதல் தெரிவித்து,

அன்னாரது வாரிசுதாரருக்கு முதலமைச்சர் நிவாரண நிதி உதவித்தொகை ரூ.3 இலட்சத்திற்கான காசோலையினை வழங்கினார்கள். 

உடன் விளாத்திக்குளம் சட்டமன்ற உறுப்பினர் ஜி.வி.மார்கண்டேயன்,  உள்ளாட்சி பிரதிநிதிகள், கோவில்பட்டி வருவாய் கோட்டாட்சியர், கோவில்பட்டி மற்றும் கயத்தாறு வட்டாட்சியர்கள் உள்ளிட்டோர் உள்ளனர்.

Previous Post Next Post