தன்னை ஏற்ற மறுத்த அரசு பஸ்சை ஆட்டோவில் விரட்டிச் சென்று நியாயம் கேட்ட கர்ப்பிணி பெண்ணால் பரபரப்பு

 திருப்பூர் பழைபேரூந்து நிலையம் அருகே தன்னை ஏற்ற மறுத்த அரசு பஸ்சை ஆட்டோவில் விரட்டிச் சென்று கர்ப்பிணி பெண் நியாயம் கேட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது..

ஊட்டி மேட்டுப்பாளையத்தை சேர்ந்த சமீமா பர்வின் 24 வயது கர்பிணியான சமீமா பர்வின் இன்று மதியம் மேட்டுப்பாளையத்திலிருந்து திருப்பூரில் உள்ள அவரது உறவினர் வீட்டிற்கு வருவதற்காக அரசு பஸ் ஒன்றில் வந்தார் திருப்பூர் அவிநாசி ரோட்டில் உள்ள எஸ்ஏபி பஸ் நிறுத்தத்தில் இறங்கிய அவர் அங்கிருந்து திருப்பூர் பழைய பஸ் நிலையம் செல்வதற்காக அந்தவழியாக வந்த அரசு டவுன்பஸ்ஸில் ஏறுவதற்காக சமீமா பர்வின் நின்றிருந்தார்.

அப்போது அந்தவழியாக வழித்தட எண் 10ம் நெம்பர் பேரூந்தில் சமீமா பர்வின் ஏற முற்பட்டபோது அவர் ஏறுவதற்குள் கண்டக்டர் சுரேஸ் விசிலடித்ததையடுத்து ஓட்டுனர் சதாசிவம் பேருந்தை வேகமாக ஓட்டிக்கொண்டு சென்று விட்ட்டார்.

இதனால் விரக்தியடைந்த சமீமா பர்வின் பழையபஸ்நிலையம் அருகில் இருக்கும்அவரது உறவினர்களுக்கு தகவல் கொடுத்து விட்டு அங்கிருந்த ஆட்டோவைப்பிடித்துக்கொண்டு தன்னை ஏற்ற மறுத்துவிட்டு சென்ற பஸ்சை பின்தொடர்ந்து சென்றார் அப்போது பழைய பஸ்நிலையம் அருகில் பஸ் வந்தவுடன் ஆட்டோவில் இருந்து இறங்கிய சமீமா பர்வின் மற்றும் அவர் கொடுத்த தகவலின் பேரில் அங்கு தயாராக நின்றிருந்த சமீமா பர்வின் உறவினர்கள் ஒன்று சேர்ந்து அந்த அரசு பஸ்ஸை வழிமறித்து ஓட்டுனர் மற்றும் நடத்துனர் ஆகியோரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன் தான் ஒரு கர்பிணி என்றும் பாராமல் ஏறுவதற்குள் அவசர அவசரமாக பஸ்ஸை ஓட்டியதில் ஏதாவது விபரீதம் நடந்திருந்தால் என் பிள்ளைகளை யார் பார்ப்பது எனக்கூறி கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதனால் அப்பகுதியில் கடுமையான போக்குவரத்து ஏற்பட்டது தகலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போக்குவரத்து துறை அதிகாரிகள் சமீமா பர்வின் மற்றும்அவரது உறவினர்களிடம் சமாதானம் பேசியதை அடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர் 

இது குறித்து பாதிக்கப்பட்ட சமீமா பர்வின் கூறியபோது அரசு சார்பில் நரப்பேரூந்துகளில் பெண்களுக்கு கட்டணம் இல்லை என அறிவித்தது ஆனால் அரசு பஸ் கண்டக்டர்கள் தங்கள் சொந்த பஸ்ஸில் பெண்களை இலவசமாக அழைத்து செல்வதாக நினைத்துக்கொண்டு பெண்களை கண்டால் பஸ்சை நிறுத்தாமல் செல்வதும் பஸ்சில் ஏறிய பெண்களை தரக்குறைவாக பேசுவதும் அறுவருக்க தக்கவகையில் உள்ளது.

 இதை நான் முதலமைச்சர் தனிப்பிரிவு வரை கொண்டுசெல்வேன் என குமுறினார் இதை பாரத்துக்கொண்டிருந்த பெண்கள் பலரும் சமீமா பர்வின் கருத்துக்கு ஒட்டுமொத்தமாக ஆதரவு தெரிவிக்கும் விதமாக அரசுபஸ் நடத்துனர்களை வசைபாயது ஒட்டு மொத்த அரசுப்போக்குவரத்து நடத்துனர்களின் மீதுள்ள ஆதங்கமாக வெளிப்பட்டது குறிப்பிடத்தக்கது. தனது உரிமையை விட்டுக் கொடுக்காமல் ஆட்டோவில் விரட்டி சென்று போராடிய அந்த பெண்ணை அனைவரும் பாராட்டுகின்றனர்.

Previous Post Next Post