குழந்தைகள் கக்கூஸ் ஐ கூட எட்டி பார்க்காத நகராட்சி கமிஷனர். - இவர் குழந்தை இங்க படிச்சா? பெற்றோர்கள் குமறல்.


சத்தியமங்கலம் - பிப்.28

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் காவல் நிலையத்தில் எதிர்புறம் உள்ள நகராட்சி நடுநிலைப்பள்ளியில்படிக்கும் குழந்தைகள் மற்றும் பெற்றோர்கள் இன்று காலை சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இது குறித்து பெற்றோர்கள் தமிழ் அஞ்சல் நாளிதழுக்கு அளித்த பிரத்யோக பேட்டியில்,

நூறு வருஷம் பழமை வாய்ந்த கட்டிடம். கூரை ஓடுகள் தன்னப்போல பேய்ந்து, பேய்ந்து விழுகுது.குழந்தைகள் மதிய வேளையில், அங்கு தான் உட்கார்ந்து சாப்பிடறங்கா.ஆபத்தை உணராத குழந்தைகளும், ஆபத்தை கண்டுக்காத


நகராட்சி நிர்வாகமும்.மூணு வருஷம் மனு கொடுத்து பாத்துட்டோம்.மறியல் பண்ணுன அடுத்த பத்து நிமிஷத்துல செஞ்சு தரதா சொல்றாங்க.கக்குசு கிளீன் பண்ண தினமும் ரெண்டு ஆளை அனுப்புறதா சொல்றாங்க.


மூணு வருஷமா செஞ்சிருந்தா நாங்க எதுக்கு ரோட்டில உட்காறோம். பள்ளி கூட கக்கூசு சுத்தம் இல்லாம, குழந்தைகளுக்கு யூரியன் இன்பெக்க்ஷன் வருது. குழந்தைகள் உசுருக்கு ஆபத்துன்னா, 100 வருஷம் பழமையை காக்கிறோம் என்கிறாங்க. குழந்தைகள் உசுருக்குபயந்து பள்ளிகூடம் அனுப்ப முடியுமா? மலைப்பகுதியில் 6 குழந்தைக்கு 1 டீச்சர்ங்கறாங்க. ஆனா இங்க 500 குழந்தைகளுக்கு 6 டீச்சரு.

இப்படியே தொடர்கதையானா மூனு ரோட்டையும் மறிச்சு மறுபடியும் மறியல் பன்னுவோம். இந்த பள்ளிக்கூட சுற்றுபுறச்சூழல், கட்டிடம், கக்கூஸ் பிரச்சனை சரியாக்கறேன்று சத்திநகராட்சி கமிஷனர் உறுதிகொடுத்துக்காரு. அதனால கலைஞ்சு போனோம். கமிஷனர் வந்தாரு. பள்ளிகூடம் பூரா சுத்தி பாத்தாரு.. கக்கூஸ் ஐ பேருக்கு கூட எட்டி பாக்கல. பெரிய ஹயர் ஆபிசரு. ரொம்ப படிச்சவங்க.

கக்கூஸ் கூட எட்டி பாக்காத இவங்க,இவங்க குழந்தைகள இங்க படிக்க வைப்பாங்களா? நாங்களும் எங்க குழந்தைகளுக்காக தானே கேட்கறோம். சரி என்னதான் நடக்குமுன்னு பார்க்க தான் போறோம் - விரக்தியில் பள்ளி குழந்தைகளின் பெற்றோர்கள்.

தமிழ் அஞ்சல் செய்திகளுக்காக சத்தியமங்கலம் செய்தியாளர் K.நாராயணசாமி

Previous Post Next Post