மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச பேருந்து பயண சலுகை : ஏப்.5ல் சிறப்பு முகாம் - ஆட்சியர் தகவல்.!


தூத்துக்குடியில் வருகிற 5ம் தேதி மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச பேருந்து பயண சலுகை வழங்க சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது. 

இது தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் இலவச பேருந்து பயண சலுகை வழங்கும் திட்டத்தின் கீழ் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு மாவட்டம் முழுமைக்கும், உடல் இயக்க குறைபாடுடையோர், 

காதுகேளாதோர் மற்றும் வாய்பேசாதோர் மற்றும் மனவளாச்சி குன்றியோர்களுக்கு கல்விக்காக, பணிபுரிவதற்காக, பயிற்சி புரிவதற்காக மற்றும் பயனுள்ள காரணத்திற்காக வசிக்கும் இடத்திலிருந்து சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு சென்று வர இலவச பேருந்து பயண சலுகை பெற்று பயனடையும் விதமாக சிறப்பு முகாம் தூத்துக்குடி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் மற்றும் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் இணைந்து நடத்தப்படவுள்ளது.

இம்முகாமில் புதிய மற்றும் புதுப்பித்து வழங்கும் இலவச பயண அட்டைகள் வழங்கப்படவுள்ளது. பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள், உடலியக்க குறைபாடுடையோர், காது கேளாதோர், மற்றும் மனவளர்ச்சிகுன்றிய மாற்றுத் திறனாளிகளுக்கு 05.04.2022 செவ்வாய் கிழமை அன்றைய தினத்திலும் பயணஅட்டையை புதுப்பித்து வழங்கும் முகாம் நடைபெறவுள்ளது.

இம்முகாமில் கலந்து கொள்ளும் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள், உடலியக்க குறைபாடுடையோர், காது கேளாதோர், மற்றும் மனவளர்ச்சிகுன்றிய மாற்றுத் திறனாளிகள் இலவச பயண அட்டை பெற தேசிய மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை நகல், குடும்ப அட்டை நகல், 6 பாஸ்போட் சைஸ் போட்டோ, 

பழைய பேருந்து பயண சலுகை அட்டை அசல் மற்றும் நகல் ஆகியவற்றுடன் மேலும் கல்விக்காக, பணிபுரிவதற்காக, பயிற்சி புரிவதற்காக மற்றும் பயனுள்ள காரணத்திற்கான சம்பந்தப்பட்ட நிறுவனத்திடமிருந்து பெறப்பட்ட சான்று ஆகியவற்றுடன் 05.04.2022 செவ்வாய் கிழமை அன்றும் 

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் நடைபெறவுள்ள இலவச பேருந்து  பயண சலுகை அட்டை வழங்கும் சிறப்பு முகாமில் கலந்து கொண்டு விண்ணப்பித்து பயனடையுமாறு மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ்,  தெரிவித்துள்ளார்

Previous Post Next Post