கந்துவட்டி சட்டத்தினை மாற்ற வலியுறுத்தி கோவில்பட்டியில் செக் மாலை அணிந்து நூதன போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் நிர்வாகி.!

தமிழகத்தில் நாளுக்கு நாள் கந்து வட்டி கொடுமையினால் தற்கொலை அதிகரித்து வருவதாகவும், நாள் வட்டி, வார வட்டி, மீட்டர் வட்டி என பல்வேறு கோணங்களில் கந்து வட்டி கும்பல் ஏழை,எளிய மக்களை வாட்டி வதைத்து வருவதாகவும், புரோ நோட் மற்றும் செக் ஆகியவற்றை வைத்து வெவ்வேறு விதங்களில் கடன் பெற்றவர்களை மிரட்டி கந்துவட்டி கும்பல் பணத்தினை பறித்து வருவதாகவும், தமிழகத்தில் கந்து வட்டி கும்பல் நெட்வொர்க் அமைத்து மாபியா கும்பலாக செயல்பட்டு வருவதாகவும், தற்பொழுதுள்ள கந்து வட்டி சட்டம் கந்து வட்டி கும்பல் எளிதில் தப்பித்துக்கொள்ளும் வகையில் இருப்பதால் பொது மக்கள் பாதிக்கப்படும் நிலை இருக்கிறது.

எனவே தமிழக அரசு கந்து வட்டி சட்டத்தில் மாற்றங்களை கொண்டு வர வேண்டும், கந்து வட்டி கும்பல் தப்பித்து விடாத வகையில் கந்து வட்டி சட்டத்தினை கந்து வட்டி வன்கொடுமை தடுப்பு சட்டமாக மாற்ற வேண்டும், கந்து வட்டி கும்பல் மீது இரும்புக்கரம் கொண்டு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் மாவட்ட துணை தலைவர் அய்யலுச்சாமி என்பவர் கழுத்தில் செக் மாலை அணிந்து, கையில் அக்னிச்சட்டி ஏந்தியவாறு தனது கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பியவாறு கோவில்பட்டி கோட்டாட்சியர் சங்கரநாரயணனிடம் கோரிக்கை மனு அளித்தார். 

காங்கிரஸ் நிர்வாகி திடீர் போராட்டத்தினால் சிறிது நேரம் கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Ahamed

Senior Journalist

Previous Post Next Post