தாளவாடியில் 131 வது அம்பேத்கர் ஜெயந்தி விழா - ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

    ஈரோடு மாவட்டம் தாளவாடி அருகே உள்ள மெட்டலவாடி கிராமத்தில்  அம்பேத்கர் அவர்களின் 131 வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு அம்பேத்கர் ஜெயந்தி விழா நடைபெற்றது. இந்த விழாவிற்கு சாம்ராஜ்நகர்  முன்னாள் காங்கிரஸ் எம்.பி துருவ நாராயணன், பவானிசாகர் முன்னாள் எம்.எல்.ஏ  பி.எல்.சுந்தரம் உள்ளிட்டோர் தலைமை வகித்தனர்.

இந்த அம்பேத்கர் ஜெயந்தி விழாவில் அம்பேத்கர் அவர்களின் வாழ்க்கை வரலாறு, அவர் எழுதிய சட்டங்கள், அவர் அனைத்து மக்களுக்கும் சம நீதி கிடைக்க வேண்டும் என்பதற்காக அவருடைய போராட்டங்கள், உள்ளிட்டவை குறித்து சிறப்பு அழைப்பாளர்கள் சிறப்புரை ஆற்றினர். இந்த அம்பேத்கர் ஜெயந்தி விழாவில் தாளவாடி காவல் ஆய்வாளர் அன்பரசு, மல்லன்குழி ஊராட்சி மன்ற தலைவர் புட்டுதேவம்மா,ரமேஷ், தாளவாடி வட்டாரத்தில் உள்ள அனைத்து ஊராட்சி மன்ற தலைவர்கள், ஒன்றிய கவுன்சிலர்கள், அனைத்து கட்சி பிரமுகர்கள், விடியல் இளைஞர் மன்றத்தினர், சேவகன் இளைஞர் மன்றத்தினர், அம்பேத்கர் மக்கள் இயக்கத்தினர் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.

Previous Post Next Post