"இந்தியாவில் கொரோனோவால் ஏற்பட்ட பொருளாதார இழப்புகளை சரி செய்ய பத்தாண்டுகளுக்கு மேல் ஆகலாம்".!- ரிசர்வ் வங்கி அறிக்கை.!

கொரோனா பாதிப்பால் இந்திய பொருளாதாரத்தில் ஏற்பட்ட இழப்பை சரி செய்ய பத்தாண்டுகளுக்கு மேல் ஆகலாம் என்று இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்ட நாணயம் மற்றும் நிதி (Report on Currency and Finance (RCF). தொடர்பான சமீபத்திய அறிக்கையில் தெரிவித்துள்ளது. மேலும் கடந்த மூன்று ஆண்டுகளில் உற்பத்தியில் இந்தியாவுக்கு ரூ. 50 லட்சம் கோடிக்கு மேல் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அறிக்கை கணித்துள்ளது .

அந்த அறிக்கை “இந்தியா 2034-35ல் COVID-19 இழப்புகளை சமாளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது,” என்று  கூறுகிறது. "தனிப்பட்ட ஆண்டுகளுக்கான உற்பத்தி இழப்புகள் 2020-21, 2021-22 மற்றும் 2022-23 இல் முறையே ரூ.19.1 லட்சம் கோடி, ரூ.17.1 லட்சம் கோடி மற்றும் ரூ.16.4 லட்சம் கோடியாக கணக்கிடப்பட்டுள்ளது.

அடுத்த ஐந்து ஆண்டுகளில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 66% க்கும் கீழே பொது அரசாங்கக் கடனைக் குறைக்க வலியுறுத்தியுள்ளனர். இந்தியாவின் நடுத்தர கால வளர்ச்சி வாய்ப்புகளைப் பாதுகாக்க இது முக்கியமானது என்று அறிக்கை கூறுகிறது.

அறிக்கையின்படி, உலகிலேயே மிகப்பெரிய தொற்றுநோயால் ஏற்பட்ட இழப்புகளில் பெரிய அளவில் ஒன்றாக இந்தியா பாதிக்கப்பட்டுள்ளது, இது மீட்க பல ஆண்டுகள் ஆகலாம்.

"இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகும் கூட, கோவிட்-க்கு முந்தைய நிலைக்கு பொருளாதாரச் செயல்பாடுகள் மீண்டு வரவில்லை. இந்தியாவின் பொருளாதார மீளுருவாக்கம், ஆழமான வேரூன்றிய கட்டமைப்பு இடையூறுகள் மற்றும் தொற்றுநோயின் வடுக்கள் ஆகியவற்றிலிருந்து கடினமான சவால்களை எதிர்கொள்கிறது," என்று அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

"ரஷ்யா-உக்ரைன் மோதலானது மீட்சியின் வேகத்தை குறைத்துள்ளது, அதிக பொருட்களின் விலை, பலவீனமான உலகளாவிய வளர்ச்சிக் கண்ணோட்டம் மற்றும் இறுக்கமான உலகளாவிய நிதி நிலைமைகள் மூலம் அதன் தாக்கம் பரவுகிறது" என்று அவர்கள் மேலும் தெரிவித்தனர்.

இந்த அறிக்கை ரிசர்வ் வங்கியின் ஆய்வுக் குழுவால் தயாரிக்கப்பட்ட பங்களிப்பாளர்களின் கருத்துக்களை பிரதிபலிக்கிறது, ரிசர்வ் வங்கியின் கருத்து அல்ல" என்று ரிசர்வ் வங்கி கூறியது.


Ahamed

Senior Journalist

Previous Post Next Post