சிறப்பு கிராமசபை கூட்டம்; கனிமொழி எம்பி, அமைச்சர் கீதாஜீவன் பங்கேற்பு.

தமிழகம் முழுவதும் நேற்று கிராம சபை கூட்டங்கள் நடந்தது. அதன்படி கயத்தாறு ஒன்றியம் தெற்கு இலந்தைகுளம் பஞ்சாயத்திற்கு உட்பட்ட ஆத்திகுளத்தில் நடந்த சிறப்பு கிராம சபை கூட்டத்தில் தூத்துக்குடி  பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி, மகளிர் மற்றும் சமூக நலத்துறை அமைச்சர் கீதாஜீவன் ஆகியோர் கலந்துகொண்டு பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்து அவற்றை நிரைவேற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஆணையிட்டனர். மேலும் அவர்கள் அளித்த மனுக்களை பெற்றுக்கொண்டு அதன்மீது நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர். பின்பு தமிழக அரசு வேளாண்மை மற்றும் உழவன் நலத்துறை சார்பில் அமைக்கப்பட்ட வேளாண் பொருள் கண்காட்சியினை பார்வையிட்டு, பயனாளிகளுக்கு வேளாண் பொருட்களை வழங்கினர்.

அதன்பின்பு கயத்தாறு ஒன்றியம் கடம்பூர் பேரூராட்சிக்கு உட்பட்ட கடம்பூர் மாரியப்ப நாடார் ராமலட்சுமி அரங்கத்தில் நடந்த சிறப்பு மக்கள் குறைதீர் கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு இலவச வீட்டுமனை பட்டாக்கள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கி, பொதுமக்கள் அளித்த கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டனர். 

இந்நிகழ்ச்சிகளில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் செந்தில்ராஜ், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, கோவில்பட்டி நகர்மன்றத் தலைவர் கா.கருணாநிதி,கோவில்பட்டி கோட்டாட்சியர் சங்கரநாராயணன், கயத்தாறு வட்டார வளர்ச்சி அலுவலர் பானு, கயத்தாறு தாசில்தார் சுப்புலட்சுமி, கோவில்பட்டி காவல்துறை துணை கண்காணிப்பாளர் உதயசூரியன், கயத்தாறு இன்ஸ்பெக்டர் முத்து, தெற்கு இலந்தைகுளம் பஞ்சாயத்து தலைவர் செல்வி ரவிக்குமார், துணை தலைவர் லட்சுமி, முன்னாள் தலைவர் செல்லையா, கயத்தாறு ஒன்றிய திமுக செயலாளர்கள் மேற்கு கருப்பசாமி, கிழக்கு சின்னப்பாண்டியன், பேரூர் கழக செயலாளர் சுரேஷ் கண்ணன்,  மாவட்ட பொறியாளர் அணி இ.பி.ரமேஷ், கோவில்பட்டி நகர்மன்ற உறுப்பினர் விஜயன்,  கடம்பூர் பேரூர் கழக செயலாளர் பாலகுமார் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

Ahamed

Senior Journalist

Previous Post Next Post