பண்ணாரி அம்மன் கோவில் உண்டியலில் ரூ.98.44 லட்சம் பணம்...448 கிராம் தங்கம்... 625 கிராம் வெள்ளி பக்தர்கள் காணிக்கை...


ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை அடுத்த பண்ணாரியில்,உலகப்பிரசித்தி பெற்ற, பண்ணாரி அம்மன் கோவில் உள்ளது.இந்த கோவிலுக்கு,அமாவாசை மற்றும் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் பக்தர்கள் அதிகமாக வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். அவ்வாறு வரும் பக்தர்கள் தங்கள் நேர்த்திக் கடனை, காணிக்கையாக உண்டியலில் செலுத்துவது வழக்கம்.  உண்டியலில் செலுத்தும் காணிக்கைகளை சேகரிக்க, கோவில் நிர்வாகம் மூலம் மாதந்தோறும் உண்டியல் திறக்கப்படுகிறது.

அந்த வகையில் இந்த மாதம் நேற்று (9-5.24)  உண்டியல் திறக்கப்பட்டு காணிக்கை எண்ணும் பணி நடந்தது. கோயில் துணை ஆணையரும், செயல் அலுவலருமான இரா.மேனகா தலைமையில்,  பவானி சங்கமேஸ்வரர் கோயில் உதவி ஆணையரும், செயல் அலுவலருமான சு.சுவாமிநாதன், சத்தி இந்து சமய அறநிலையத்துறை ஆய்வாளர் தே. சிவமணி, பரம்பரை அறங்காவ லர்கள்.வீ.புருஷோத்தமன், ராஜாமணி தங்கவேல், புஷ்பலதா கோதண்ட ராமன், டி.அமுதா, எம்.பூங்கொடி மற்றும் கண்காணிப்பாளர், பால சுந்தரி ஆகியோர் முன்னிலை யில் நடைபெற்றது. 

கோவில் அலுவலர்கள், பணியாளர்கள், தன்னார்வலர்கள் மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் இந்த உண்டியல் காணிக்கை என்னும் பணியில் ஈடுபட்டனர். 

உண்டியலில் ரொக்கப்பணம் ரூ.98 லட்சத்து 44 ஆயிரத்து 875 ரூபாயை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனர். மேலும்  தங்கம் 448 கிராம் வெள்ளி 625 கிராம் இருந்தது. இதை கோவில் நிர்வாகத்தினர் வங்கியில் செலுத்தினர்.




Previous Post Next Post