ராணுவத்திற்க்கு எரிபொருள் தட்டுப்பாடு :கார், வேன், உள்ளிட்ட தனியார் வாகனங்கள் ஓட்டுவதை நிறுத்துமாறு பொது மக்களுக்கு உக்ரைன் நகராட்சி அதிகாரிகள் வேண்டுகோள்

 

உக்ரைனில் எரிபொருள் பற்றாக்குறை காரணமாக,  உக்ரைனின் படைகளுக்கு வழங்கப்படும் எரிபொருள் விநியோகத்தில் பாதிப்பு ஏற்படாமல் இருக்க தனியார் வாகனங்களை ஓட்டுவதை நிறுத்துமாறு பொது மக்களுக்கு உக்ரைன் நகராட்சி அதிகாரிகள், அறிவுறுத்தியுள்ளனர்.

ரஷ்ய போர் காரணமாக உக்ரைன் மற்றும் ஐரோப்பாவின் பிற பகுதிகளில் எரிபொருள் பற்றாக்குறையால் ஏற்பட்டுள்ள   நிச்சயமற்ற தன்மையை பிரதிபலிக்கிறது என சர்வதேச ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

இந்த வாரம் போலந்து மற்றும் பல்கேரியாவிற்கு எரிவாயு ஏற்றுமதியை ரஷ்யா நிறுத்திய நிலையில், ஐரோப்பிய ஒன்றியமே பெரும் எரிபொருள் சவால்களுடன் போராடி வருகிறது. 

மாஸ்கோவின் ஆக்கிரமிப்புக்கு தடை விதித்து, ரஷ்யாவிடமிருந்து எரிசக்தி வாங்குவதைக் குறைக்க நடவடிக்கை எடுத்து வருவதால், ​​விலைகள் அதிகரித்து வருகின்றன. 

யூரோவை நாணயமாகப் பயன்படுத்தும் 19 ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் இந்த மாதம் 7.5 சதவீதமாக இருந்த பணவீக்கம், முன் எப்போதும் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது. எரிசக்தி பொருட்களின் விலை அதிகரிப்பு ஆண்டு அடிப்படையில் சுமார் 40 சதவீதமாக உயர்ந்து உள்ளது.

27 உறுப்பினர்களைக் கொண்ட ஐரோப்பிய கூட்டமைப்பு இன்னும் எரிசக்தி இறக்குமதிக்காக ரஷ்யாவையே சார்ந்துள்ளது.



Ahamed

Senior Journalist

Previous Post Next Post