கலைஞர் பிறந்தநாள் விழாவில் மாவட்டம் முழுவதும் நலத்திட்ட உதவி வழங்கி கொண்டாட வேண்டும் - அமைச்சர் கீதாஜீவன் வேண்டுகோள்.!*


தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் எட்டையாபுரம் சாலையில் உள்ள மாவட்ட  அலுவலகத்தில் வைத்து மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ் தலைமையில் மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், பொதுக்குழு உறுப்பினரும் மாநகராட்சி மேயருமான ஜெகன் பெரியசாமி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. 

கூட்டத்தில் வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும் சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் பேசுகையில் 

வரும் 3ம் தேதி கலைஞர் கருணாநிதி பிறந்தநாளை வடக்கு மாவட்டம் முழுவதும் சிறப்பாக நலத்திட்ட உதவிகளை வழங்கி கொண்டாட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். திமுக கழகத்தை தோற்றுவித்த அண்ணா மறைவுக்குபின் அவர் வழி தொட்டு இயக்கத்தை கட்டிக்காத்தவர் கலைஞர். இயக்கத்திற்கு பல்வேறு சோதனைகள் வந்த போது எல்லாம் அதை தகர்த்தெறிந்தவர் 

13 முறை சட்டமன்றத்திற்கு போட்டியிட்டு வெற்றி பெற்ற தலைவர் 5 முறை தமிழகத்தில் முதலமைச்சராக பணியாற்றி பல்வேறு திட்டங்களை தந்து தமிழ்நாட்டை உலக அரங்கில் உயர்த்தி காட்டியவர் 

கலைஞர் 99வது பிறந்தநாளை முன்னிட்டு வடக்கு மாவட்டத்திற்குட்பட்ட மாநகர நகர ஒன்றிய பகுதி வார்டு மற்றும் கிளைக்கழகங்கள் தோறும் கலைஞர் படத்தை வைத்து அஞ்சலி செலுத்தியும் திமுக கொடியேற்றியும் இனிப்புகள் வழங்கியும் 

கழக கொள்கை பாடல்களை ஓலிப்பரப்பி ஏழை எளியோர்களுக்கு நலத்திட்ட உதவி வழங்கி உற்சாகமாக கொண்டாட வேண்டும மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து முதியோர்கள் அனாதைகள் இல்லங்களுக்கு உணவுகள் வழங்கி மருத்துவமணையில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் மாநில மீனவரணி துணைச்செயலாளர் புளோரன்ஸ், துணை மேயர் ஜெனிட்டா, கோவில்பட்டி நகர சேர்மன் கருணாநிதி, மாவட்ட துணைச் செயலாளர்கள் ராஜ்மோகன் செல்வின், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் மதியழகன், மாவட்ட மாணவரணி துணைச் செயலாளரும் மாநகராட்சி மண்டல தலைவருமான வக்கீல் பாலகுருசாமி, உள்பட திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Previous Post Next Post