டாஸ்மாக் ஊழியரை தாக்கி பணத்தை கொள்ளையடித்த மர்ம நபர்கள்.!


தூத்துக்குடி சிவந்தாகுளம் 5வது தெருவில் டாஸ்மாக் ஊழியரை தாக்கி பணத்தை கொள்ளையடித்த மர்ம நபர்களை போலிசார் தேடி வருகின்றனர்.

தூத்துக்குடி சிவந்தாகுளம் 5வது தெருவில் அரசு டாஸ்மாக் கடை எண் 10147 செயல்பட்டு வருகிறது. இக்கடையில் ஊழியர்களான பொன்னகரத்தை சேர்ந்த சங்கர் (47), ஒட்டப்பிடாரத்தை சேர்ந்த ரமேஷ்(47), ஆகியோர் விற்பனையில் ஈடுபட்டு இருந்தனர். 


அப்போது இருசக்கர வாகனத்தில் மது வாங்க வந்த நான்கு பேர் ஊழியர்களான சங்கர், ரமேஷ் ஆகியோரிடம் மது பாட்டில் கேட்டு வாக்குவாதம் செய்ததாக கூறப்படுகிறது. பின்னர் வாக்கு வாதம் முற்றி அந்த மர்ப நபர்கள் ஊழியர் சங்கரை மது பாட்டிலால் தலையில் கடுமையாக தாக்கி விட்டு விற்பனைத் தொகை  சுமார் 80ஆயிரம் பணத்தை எடுத்து விட்டு தப்பி சென்றுள்ளனர்.

தலையில் பலத்த படுகாயம் அடைந்த சங்கர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மற்றொரு விற்பனையாளர் ரமேஷ்க்கு சிறு காயம் ஏற்பட்டுள்ள நிலையில், கடையின் மேற்பார்வையாளர் முத்துக்குமார் மற்றும் தூத்துக்குடி மாவட்ட மேலாளர் முருகனுக்கு தகவல் கொடுத்தார். பின்னர் தெற்கு காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தெற்கு காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி குற்றவாளிகளை தேடி வருகின்றனர் .

Previous Post Next Post