தவறான உறவுக்கு அழைத்த மாமனார்; மாமனாருக்கு ஆதரவாகப் பேசிய மாமியார்.. கண்டு கொள்ளாத கணவன்!


சேலம் மாவட்டம் வாழப்பாடி தாலுகா, வேப்பிலைப்பட்டி காமராஜர் காலனியைச் சேர்ந்தவர்  வெங்கடேஷ்வரன். லாரி டிரைவராக உள்ளார். 

இவரது மனைவி ரம்யா. இவர்களுக்கு  சர்வேஸ் என்ற ஆண் குழந்தையும், பிரதிக்ஷா என்ற பெண் குழந்தையும் உள்ளனர். 

கடந்த  2 நாட்களுக்கு முன்பு வெங்கடேஷ்வரனின் மனைவி ரம்யா, மதியம் 2 மணியளவில் வீட்டில் தனியாக இருந்த போது அவரது மாமனார் பச்சமுத்து,  அவரை தகாத உறவுக்கு அழைத்தாராம். 

 அதற்கு அவர் மறுத்ததால், தகாத வார்த்தைகளில் திட்டியுள்ளார்‌.  இதைத் தன் கணவரிடம் கூறியதற்கு அவரும் அவரது அப்பாவிற்கு சாதகமாகவே பேசுகிறாராம்.

மாமியார் தனலட்சுமியும், "என் கணவர் சொல்லும்படி இல்லை என்றால் வீட்டை விட்டு போ" என, அடித்துத் துன்புறுத்துகிறாராம்.

இதனையடுத்து கணவர், மாமனார், மாமியார் மீது நடவடிக்கை எடுக்குமாறு வாழப்பாடி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

Previous Post Next Post