சர்ச்சையான நெய்தல் கலைவிழா - மீனவர்கள் கூட்டமைப்பு சார்பில் கனிமொழி MPக்கு கண்டனம்.!

 

நெய்தல் நில மக்களைப் புறக்கணித்து கனிமொழி எம்பி நெய்தல் கலைவிழா நடத்துகிறாரா? எனத் தேசிய பாரம்பரிய மீனவர்கள் கூட்டமைப்பு சார்பில் கண்டனம் தெரிவித்துள்ளது, நெய்தல் விழா குறித்த திடீர் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து தேசிய பாரம்பரிய மீனவர்கள் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் சின்னத்தம்பி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது,

நெய்தல் சமூகத்தில் அனைத்து கலைகளுக்கும் பஞ்சமில்லை. தொல்காப்பியம், சிலப்பதிகாரம் உள்ளிட்ட பல சங்க இலக்கியங்களில் நெய்தல் நில மக்களின் வாழ்க்கை, கலைத்திறனை வெளிப்படுத்துகிறது. தற்போதும் நெய்தல் நில மீனவச் சமூகத்தில் கலைஞர்களும், எழுத்தாளர்களும், படைப்பாளிகளும் ஏராளமாக உள்ளனர். ஆனால் கனிமொழி MP நெய்தல் நிலக்கடலோடி மீனவ மக்களைப் புறக்கணித்து சமவெளியில் இருந்து கலைஞர்களைக் கொண்டு வந்து 'நெய்தல் கலைவிழா' என்று,  வரும் ஜூலை 7ந்தேதி முதல் 10 வரை தூத்துக்குடியில் நடத்த திட்மிட்டுள்ளதாக அறிகிறோம்.  நெய்தல் நில மீனவச் சமுதாய மக்களிடம் இது குறித்து எந்தவித ஆலோசனையும் செய்யவில்லை. 

 ஏற்கனவே தி.மு.க.  தலைமை மீனவர்களின் அரசியல் அங்கீகாரமாகப் பார்க்கப்பட்ட மீன்வளத்துறை அமைச்சர் பதவியை மீனவர்களிடம் இருந்து பிடுங்கி வேறு சமூகத்துக்கு கொடுத்துவிட்டது. இதன் மூலம் மீனவர்களின் அரசியல் அங்கிகாரத்தை திமுக பறித்துவிட்டது. தற்போது நெய்தல் நில மீனவ மக்களின் வரலாற்றை மறைக்க சமவெளி மக்களை வைத்து “நெய்தல் கலைவிழா” என்ற பெயரில் நடத்த திமுக முயற்சி செய்கிறது.

நெய்தல் கலைவிழா என்பது நெய்தல் மக்களின் கலாச்சாரம், பண்பாடு மற்றும் வரலாறு அடிப்படையில் தான் இருக்கவேண்டும். ஆனால், நெய்தல் நில மீனவ மக்களின் கலாச்சாரத்தைப் புறக்கணித்து, நெய்தல் நில மக்களின் வரலாற்றை மறைக்க முயற்சிக்கும் கனிமொழி எம்-யின் செயல் கண்டனத்துக்கு உரியது. 

மேலும், தொடர்ந்து நெய்தல் நில மீனவச் சமூகத்தைப் புறக்கணிக்கும் திமுக தலைமையை வன்மையாகக் கண்டிக்கிறோம்.

மீனவப் படைப்பாளிகள், கலைஞர்களை மையப்படுத்தி நெய்தல் கலை விழாவை நடத்துவதே நெய்தல் விழாவின் சிறப்பாக இருக்கும் என அவர் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

  

Ahamed

Senior Journalist

Previous Post Next Post