செய்துங்கநல்லூர் அருகே சட்டவிரோதமாக கஞ்சா கடத்திய 5 பேர் கைது - 2.500 கிலோ கஞ்சா மற்றும் 3 வாகனம் பறிமுதல்.!


தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூர் காவல் நிலைய ஆய்வாளர் (பொறுப்பு) அன்னராஜ் தலைமையில் உதவி ஆய்வாளர் சதீஷ், சிறப்பு உதவி ஆய்வாளர் குணசேகரன், முதல் நிலை காவலர்கள் ஆனந்தராஜ், வேம்புராஜ், காவலர்கள் ஜான் அந்தோணி ராஜ் மற்றும் பட்டவராயன் ஆகியோர் அடங்கிய தனிப்படை போலீசார் 

நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டபோது, செய்துங்கநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கருங்குளம் பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் இருசக்கர வாகனங்களில் நின்று கொண்டிருந்தவர்களை பிடித்து விசாரணை செய்ததில், 

 கிருஷ்ணாபுரம் செல்லத்துரை நகரை சேர்ந்த முனியசாமி மகன் 1) ராஜா (41), தாதன்குளம் பகுதியை சேர்ந்த ஆறுமுகம் மகன் 2) கருப்பசாமி (29), திருச்செந்தூர் அமலி நகரை சேர்ந்த ராமகிருஷ்ணன் மகன் 3) பிச்சைகண்ணு (53), 

திருநெல்வேலி சாந்தி நகரை சேர்ந்த மச்சக்கிளி மகன் 4) முருகன் (58) மற்றும் உவரி சுனாமி காலனி பகுதியை சேர்ந்த ராஜ் மகன் 5) கிறிஸ்டோபர் (48) ஆகியோர் என்பதும், அவர்கள் சட்டவிரோதமாக இருசக்கர வாகனங்களில் கஞ்சா கடத்தியதும் தெரியவந்தது.

உடனே போலீசார் ராஜா, கருப்பசாமி, பிச்சகண்ணு, முருகன் மற்றும் கிறிஸ்டோபர் ஆகிய 5 பேரை கைது செய்து அவர்களிடமிருந்த  2 கிலோ 500 கிராம் கஞ்சா மற்றும் TN 10 E 5037 (TVS Victor), TN 69 AY 5279 (TVS Max 4R), TN 96 C 8854 (Bajaj Platina) ஆகிய 3 இரு சக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்தனர். 

இதுகுறித்து செய்துங்கநல்லூர் காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கைது செய்யப்பட்ட ராஜா மீது ஏற்கனவே தூத்துக்குடி வடபாகம் மற்றும் போதைப்பொருள் நுண்ணறிவு பிரிவு ஆகிய காவல் நிலையங்களில் 7 வழக்குகளும்,

கருப்பசாமி மீது ஏற்கனவே செய்துங்கநல்லூர் காவல் நிலையத்தில் 3 வழக்குகளும்,

பிச்சகண்ணு மீது செய்துங்கநல்லூர் மற்றும் திருச்செந்தூர் கோவில் ஆகிய காவல் நிலையங்களில் 3 வழக்குகளும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Previous Post Next Post