கோவில்பட்டியில் சிறிய பாலத்தில் லாரி மோதி விபத்து - போக்குவரத்து பாதிப்பு


தூத்துக்குடியில் இருந்து ஆலங்குளத்திற்கு சாம்பல் ஏற்றிக்கொண்டு லாரி  கோவில்பட்டி வழியாக வந்து கொண்டிருந்தது.  லாரியை மதுரையைச் சேர்ந்த டிரைவர் கலைச்செல்வம் ஒட்டி வந்தார். லாரி கோவில்பட்டி மெயின் சாலையான 

மாதாங்கோவில் தெரு,  மார்க்கெட் ரோடு, அண்ணா பஸ்  நிலையம் ஆகியவற்றை இணைக்கும் முக்கிய சாலையில்  வந்து கொண்டிருந்த போது சாலையின் ஓரத்தில் இருந்த சிறிய பாலத்தில் மோதியதால் லாரியின் டயர் வெடித்து, பட்டை உடைந்து, லாரி பாதி சாய்ந்த நிலையில் நின்றது. இது காலை நேரத்தில் நடந்த விபத்து என்பதால் 


அப்பகுதியில் வந்த பள்ளி வாகனங்கள், வேலைக்கு செல்பவர்கள், மார்க்கட்டிற்கு காய்கறி வாங்க வந்தவர்கள் ஒரே இடத்தில் கூடியதால் மிகுந்த போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போக்குவரத்து போலீசார் போக்குவரத்தை ஒரு வழி பாதையில் மாற்றி விட்டு போக்குவரத்தை சரி செய்தனர்.


இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில்  ஏற்கனவே இந்த சிறிய பாலம் அமைக்கப்படும் போது இது மிகவும் நெரிசலாக, குறுகலாக அமைக்கப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டு எழுந்தது. விபத்துகள் ஏற்பட வாய்ப்பு இருப்பதால்,

 பாலத்தினை விரிவாக்கம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்து இருந்தனர்.மேலும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க இப் பாதையை ஒரு வழி பாதையாக மாற்ற வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.

Previous Post Next Post