தூத்துக்குடி புதிய துறைமுகத்தில் வாலிபர் மர்ம சாவு : இறப்பில் சந்தேகம் இருப்பதாக உறவினர்கள் போராட்டத்தால் பரபரப்பு.!


தூத்துக்குடி டூவிபுரம் 3வது தெருவை சேர்ந்தவர் தங்கராஜ் இவரின் மகன் சாம்ராஜ்(27) இவர் இந்தியன் டைவிங் சர்வீசஸ் நிறுவனத்தில் 400மீட்டர் ஆழம் வரை கடலுக்கு அடியில் சென்று வேலை செய்யும் லைசென்ஸ் பெற்று இருக்கிறார்   

இந்நிலையில் நேற்று தூத்துக்குடி வ.உ.சி துறைமுகத்தில் பெர்த் CJ-1 என்ற தளத்தில் MV.STARK  என்ற கப்பலில் பழுது காரணமாக தூத்துக்குடி சேர்ந்த தனியார் நிறுவனத்தை பழுது பார்க்க அழைத்துள்ளது


பழுது பார்க்க கடலில் இறங்கிய சாம்ராஜ் மற்றும் கண்ணன் ஆகியோர் பழுது பார்க்கும் போது சாம்ராஜ் எதிர்பாராத விதமாக மூச்சுத் திணறி இறந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து தகவலறிந்து வந்த தூத்துக்குடி மரைன் போலீசார் உயிரிழந்த சாம்ராஜ் உடலை மீட்டு பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

இந்நிலையில் உயிரிழந்த இளைஞரின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக உறவினர்கள் சந்தேகதித்து மரணம் குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று உடற்கூராய்வு செய்யும் இடத்தில் உறவினர்கள்  போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

உயிரிழந்த சாம்ராஜ்-க்கு கடந்த 29-ம் தேதி கல்யாண நிச்சயதார்த்தம் முடிந்துள்ள நிலையில் உயிரிழந்த சம்பவம் உறவினர்கள் மத்தியில் பெரும்  சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Previous Post Next Post