தூத்துக்குடி பிரஸ் கிளப் - புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்பு!


தூத்துக்குடி பிரஸ் கிளப்பிற்க்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா தூத்துக்குடி பிரஸ் கிளப் அலுவலகத்தில் நடைபெற்றது.

தூத்துக்குடி பிரஸ் கிளப் புதிய நிர்வாகிகள் தேர்வானது 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடத்தப்பெற்று அதன் மூலம் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்படுவர். இந்த நிலையில் கடந்த ஆகஸ்ட் 15ம் தேதி நடைபெற்ற  பொதுக்குழு கூட்டத்தில், இந்த ஆண்டு நடைபெற உள்ள பிரஸ் கிளப் புதிய நிர்வாகிகளுக்கான தேர்வானது தேர்தலின்றி, உறுப்பினர்களின் ஆதரவோடு ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


அதனைத்தொடர்ந்து,  தூத்துக்குடி பிரஸ் கிளப் தலைவராக காதர் மைதீன் (கலைஞர் தொலைக்காட்சி), செயலாளராக அண்ணாதுரை (குமுதம் ரிப்போர்ட்டர்), பொருளாளராக மாரிமுத்து ராஜா (மாலை முரசு நாளிதழ்), துணை தலைவராக லெட்சுமணன் (தூர்தர்ஷன் தொலைக்காட்சி), இணைச்செயலாளராக கார்த்திகேயன் (ஜூனியர் விகடன்) ஆகியோர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.


இதனையடுத்து, பிரஸ் கிளப் நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா தூத்துக்குடி பிரஸ் கிளப் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இவ்விழாவில், உறுப்பினர்களின் ஆதரவோடு  புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பிரஸ் கிளப் நிர்வாகிகள் பொறுப்பு ஏற்று கொண்டனர். 

புதிய நிர்வாகிகளுக்கு, முன்னாள் தலைவர் சண்முக சுந்தரம், முன்னாள் செயலாளர் இசக்கிராஜா, முன்னாள் பொருளாளர் செந்தில்குமார், முன்னாள் இணைச் செயலாளர் ராஜா சிதம்பரம் மற்றும்  கவுரவ ஆலோசகர் அருண், வசீகரன், மற்றும் மூத்த பத்திரிகையாளர்கள், உறுப்பினர்கள்,  வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

Previous Post Next Post