தேசிய, தென் இந்திய தடகளத்தில் சாதனை... திருப்பூர் வீரர், வீராங்கனைகளுக்கு பாராட்டு


33-வது தென் இந்திய மாநில அளவிலான தடகளப்போட்டிகளிலும், 17-வது யூத் தடகள சேம்பியன்ஷிப் போட்டிகளிலும் திருப்பூர் மாவட்ட வீரர் & வீராங்கனைகள் தமிழக தடகள அணி சார்பில் பங்கேற்றும், பதக்கம் வென்றும் பெருமை சேர்த்த திருப்பூர் மாவட்ட வீரர் & வீராங்கனைகளை பாராட்டி சிறப்பு செய்யும் நிகழ்ச்சியானது இன்று (24.09.2022, சனிக்கிழமை) ஷெரீப் காலனியிலுள்ள, கிட்ஸ் கிளப் இன்டர்நேஷனல் பள்ளியில் திருப்பூர் தடகள சங்கத்தின் சார்பில் நடைபெற்றது. 

இந்நிகழ்ச்சிக்கு திருப்பூர் தடகள சங்கத்தின் தலைவர் சண்முகசுந்தரம் தலைமை வகித்தார். கிட்ஸ் கிளப் பள்ளி குழுமங்களின் சேர்மன் மோகன் கார்த்திக், தடகளப் பயிற்சியாளர்கள் திவ்ய நாகேஸ்வரி & அழகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

திருப்பூர் தடகள சங்க செயலாளர் முத்துக்குமார் வரவேற்புரையாற்றினார். டெக்னோ ஸ்போர்ட்ஸ் இயக்குநர் சந்தீப் குமார், வடிவேல் நிட் ப்ராஸஸ் நிர்வாக இயக்குநர் ஜெயப்பிரகாஷ், டெக்ஸான் எக்ஸ்போர்ட்ஸ் நிர்வாக இயக்குநர் மதிவாணன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். 

திருப்பூர் மாவட்டத்திலிருந்து தமிழக தடகள அணி சார்பில் பங்கேற்று வெற்றிபெற்ற ஏழு வீரர், வீராங்கனைகளுக்கு பதக்கம், வெற்றிக்கோப்பை வழங்கி சிறப்பு செய்யப்பட்டது. மேலும் அவர்களது பெற்றோர்கள்,பயிற்சியாளர்களுக்கும் பொன்னாடை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. 

நிகழ்ச்சியின்் இறுதியில் உடற்கல்வி ஆசிரியர் ராமகிருஷ்ணன் நன்றியுரை கூறினார்.

பதக்கம் வென்ற வீரர், வீராங்கனைகள் பெயர்கள் பின்வருமாறு:

தென் இந்திய தடகளத்தில் குண்டு எறிதல் போட்டியில் சூர்யபிரகாஷ் தங்கப்பதக்கம் வென்று உள்ளார்.

தென் இந்திய தடகளத்தில் 100 மீ தடைதாண்டும் ஓட்டத்தில் வெள்ளிப்பதக்கமும்,  4 x100 மீ தொடரோட்டத்தில்  வெண்கலப்பதக்கம் பெற்று இருக்கிறார் வைஷாலி.

தென் இந்திய தடகளத்தில் குண்டு எறிதல் போட்டியில் தியா சஞ்சு வெள்ளிப்பதக்கம் வென்று உள்ளார்.

17வது தேசிய யூத் தடகளப்போட்டி100 மீட்டர் ஓட்டத்தில் மனோஜ்குமார் இறுதிப்பட்டியலில் இடம் பிடித்து உள்ளார்.

17வது தேசிய யூத் தடகளப்போட்டி - 400மீ ஓட்டத்தில் ஸ்ரீவர்த்தனி பங்கேற்று உள்ளார்.

தென் இந்திய தடகள போட்டி - நீளம் தாண்டுதலில் பவீனா வெண்கலப்பதக்கம் வென்று இருக்கிறார்.

மேலும் அவர் 17வது தேசிய யூத் தடகளப்போட்டி - நீளம் தாண்டுதலில் 7வது இடம், மும்முறை தத்தித் தாண்டுதலில் 9வது இடமும் பெற்றார்.

விஷ்ணுஸ்ரீ தென் இந்திய தடகள போட்டியின் 400 மீ ஓட்டத்தில் வெண்கலப்பதக்கம்,தேசிய யூத் தடகளப்போட்டியின் 400 மீட்டர் ஓட்டத்தில்  வெண்கலப்பதக்கம் வென்றார்.,

17வது தேசிய யூத் தடகளப்போட்டியின் 1000மீ மெட்லி ரிலே இறுதிப்பட்டியலில் இடம் பிடித்து உள்ளார்.

இவர்கள் அனைவரும் பாராட்டப்பட்டனர்.

Previous Post Next Post