திருப்பூர் ஆதரவற்றோர் இல்லத்தில் ரசம் சோறு சாப்பிட்ட3 குழந்தைகள் பலி

 திருப்பூரில் உள்ள சேவாலயத்தில் ரசம் சோறு சாப்பிட்ட 3 குழந்தைகள் இறந்துள்ள நிலையில், 11 குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அந்த குழந்தைகள் இறந்து கிடக்கும் படங்கள வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருப்பூர் அருகே உள்ள அவிநாசியில் திருமுருகன்பூண்டியில் விவேகானந்தா சேவாலயா என்கிற ஆசிரமம் உள்ளது. இந்த ஆசிரமத்தில் 14 குழந்தைகள் தங்கி படித்து வரும் நிலையில் கெட்டுப் போன உணவை சாப்பிட்டதால் மூன்று குழந்தைகள் இறந்திருக்கிறார்கள். அவர்கள் நேற்று இரவு ரசம் சோறு சாப்பிட்டதாக தெரிய வந்துள்ளது.

மீதமுள்ள 11 குழந்தைகளுக்கு திருப்பூர் அரசு மருத்துவமனை மற்றும் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இந்த நிலையில் ஆசிரமத்தில் குழந்தைகள் இறந்து கிடக்கும் படங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. 

இறந்து போன  குழந்தைகள் அந்த சேவாலயத்தின் வளாகத்தில் பினமாக கிடப்பது பார்த்தவர்கள் மனதை உருக்குவதாக இருக்கிறது.

இறந்தவர்கள் பாபு 10 வயது, மாதேஷ் 13 வயது, ஆத்தீஷ் 8 வயது என தெரிய வந்துள்ளது.

மீதமுள்ள குழந்தைகளுக்கு திருப்பூர் திருப்பூர் அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. திருப்பூர் அரசு மருத்துவமனை யில் சிகிச்சை பெறும் குழந்தைகளை கலெக்டர் வினீத் நேரில் பார்வையிட்டார்.

Previous Post Next Post