டிடிவி.தினகரன் பிறந்தநாளில் 2 ஆயிரம் பேருக்கு அன்னதானம், 5 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகள்... முன்னாள் அமைச்சர் சி.சண்முகவேலு, முன்னாள் மேயர் அ.விசாலாட்சி பேச்சு

திருப்பூர் மாநகர் மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில், கழக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் பிறந்தநாள் விழா குறித்தான ஆலோசனைக் கூட்டம் காங்கயம் ரோட்டில் உள்ள கே.கே.அம்மன் கல்யாண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில்  கழக துணை பொதுச்செயலாளரும் திருப்பூர் புறநகர் மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான சி.சண்முகவேலு,  கழக தேர்தல் பிரிவு துணை செயலாளரும், திருப்பூர் மாநகர் மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் மேயருமான அ.விசாலாட்சி ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள். டிடிவி.தினகரன் பிறந்தநாளை முன்னிட்டு கேக் வெட்டி அனைவருக்கும் வழங்கப்பட்டது. 

இந்த கூட்டத்தில், கழக துணை பொதுச்செயலாளரும் திருப்பூர் புறநகர் மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான சி.சண்முகவேலு பேசியதாவது: கழகத்தின் சார்பில் புரட்சித்தலைவர் பிறந்தநாள் விழாவினை கொண்டாடி இருக்கிறோம்; புரட்சித்தலைவி அம்மா அவர்களின் பிறந்தநாளையும் பல நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடி இருக்கிறோம். நம்முடைய இயக்கம் ஆரம்பிக்கப்பட்டு பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்து வந்திருக்கிறது. பொதுச்செயலாளர் அவர்களின் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாட வேண்டும். மாவட்ட செயலாளர் கூறியது போல சிறப்பாக நடத்துங்கள். நம் இயக்கம் பல சோதனைகளை கடந்து வந்து இருக்கிறோம். நம் இயக்கம் நிச்சயமாக இலக்கை எட்டுவோம். கழகத்தினர் பொறுப்பாளர்கள் உறுப்பினர்களை சேர்த்து கழகத்தினை வலுப்படுத்த வேண்டும்.

ஒவ்வொரு தொகுதியிலும் உறுப்பினர் சேர்ப்பு இலக்கை அடைய வேண்டும். மேலும் மாவட்டம் முழுவதும் பொதுச்செயலாளர் பிறந்தநாளை முன்னிட்டு கொடிக்கம்பங்களை அமைக்க வேண்டும். காலையில் கோவில்களில் நடைபெறும் பூஜைகள் முதல், நலத்திட்ட உதவிகளை எல்லாம் வழங்கி பொதுச்செயலாளர் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாட வேண்டும். இது இயக்கம் வலுப்பெற உதவும். வாக்காளர் சேர்ப்பு முகாம்கள் நடைபெற உள்ளன. அதிலும் சிறப்பாக செயல்படுங்கள். டிசம்பர் 5 ஆம் தேதி அம்மா அவர்களின் நினைவு நாள் வருகிறது. மாநிலம் முழுவதும் இருந்து சென்னையில் திரண்டு அம்மா நினைவு நாளில் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அவர்கள் தலைமையில் எழுச்சியாக திரண்டு கடைப்பிடிக்க வேண்டும். பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அவர்கள் தலைமை ஏற்று வரக் கூடிய காலம் மிக விரைவில் வரும் என்பதில் எந்த ஐயமுமில்லை. இவ்வாறு சி.சண்முகவேலு பேசினார்.

கழக தேர்தல் பிரிவு துணை செயலாளரும், திருப்பூர் மாநகர் மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் மேயருமான அ.விசாலாட்சி பேசும்போது கூறியதாவது: 
கழக பொதுச்செயலாளர் மக்கள் செல்வர் அண்ணன் டிடிவி.தினகரன் அவர்கள் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாட வேண்டும். ஒவ்வொரு பகுதிகளிலும் உள்ள கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட உள்ளது. பெரியபாளையம் அருகில் உள்ள சுக்ரீஸ்வரர் கோவிலில் அதிகாலை டிடிவி அவர்கள் பிறந்தநாளை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் செய்து விழாவினை தொடங்க இருக்கிறோம். அனைத்து பகுதிகளிலும், அனைத்து வார்டுகளிலும் சிறப்பாக ஒவ்வொரு கோவில்களிலும் பூஜைகள் நடத்தப்பட வேண்டும். திருப்பூர் ஐயப்பன் கோவில், கருவம்பாளையம் மாகாளி அம்மன் கோவில், நல்லூர் ஈஸ்வரன் கோவில், வாலிபாளையம் சுப்பிரமணியம் கோவில், கொங்கு நகர் ஓம் சக்தி கோவில், மாரியம்மன் கோவில்,  உள்பட 13 பகுதி கழகங்கள் சார்பில் 13 கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு அன்னதானம் நடைபெறும். மதியம் 2 ஆயிரம் பேருக்கு அறுசுவை விருந்து வழங்கப்படும். சுற்றுச்சூழல் பிரிவு சார்பில், 1500 பள்ளி, கல்லூரி மாணவர்கள் பங்கேற்க கூடிய மாரத்தான் ஓட்டபோட்டிகள் நடத்தப்பட்டு, பணப்பரிசுகள் வழங்கப்பட உள்ளது.  இந்த ஓட்டப்போட்டியில் பங்கேற்கும் அனைத்து மாணவ மாணவிகளுக்கும் கழகம் சார்பில் அண்ணன் டிடிவி தினகரன் அவர்கள் படம் அச்சிட்ட டி ஷர்ட் வழங்கப்படுகிறது. 50க்கும் மேற்பட்ட பணப்பரிசுகள், கேடயங்களும், பங்கேற்கும் அனைவருக்கும் சான்றிதழ்களும் வழங்கப்பட இருக்கிறது. தலைவர் பிறந்தநாளை முன்னிட்டு 1500 மாணவ மாணவிகள் பங்கேற்கும் ஓட்டப்போட்டி இளைஞர்கள் மத்தியில் பெரும் எழுச்சியை ஏற்படுத்தும். அதே நாளில் ஆண்கள், பெண்கள், மாற்றுத்திறனாளிகள், ஏழை, எளியோர் என அனைவருக்கும் நலத்திட்டங்கள் வழங்கப்பட உள்ளது. பள்ளிக்கூட மாணவ மாணவிகளுக்கு நல உதவிகள் என மாபெரும் மக்கள் எழுச்சி நாளாக மக்கள் செல்வரின் பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. அனைத்து கழக நிர்வாகிகளும் முழு ஒத்துழைப்பினை அளித்து தங்கள் பகுதி பொதுமக்களை திரளாக பங்கேற்க செய்ய வேண்டும். இவ்வாறு முன்னாள் மேயர் அ.விசாலாட்சி பேசினார். 
மாவட்டக் கழக அவைத் தலைவர்  பி. பாலுசாமி , கழக மருத்துவ அணி துணைச் செயலாளர்  டாக்டர் கா கிங், மாவட்ட கழக துணைச் செயலாளர்  எஸ். கீதா, மாவட்ட கழக பொருளாளர்  கே.சேகர் 
புல்லட் கே ரவி கழகப் பொதுக்குழு உறுப்பினர்ஆர் கலாவதி,  பகுதி கழக செயலாளர்கள் நெருப்பெரிச்சல்  சுகம் வீர. கந்தசாமி,  ராயபுரம் முட்டை என். முருகன்,  நல்லூர் பகுதி  எஸ் ஜெகதீஷ், வாலிபாளையம்   எம் சிவக்குமார் , வேலம்பாளையம் பகுதி   ஆர் சுதாகர், பாண்டியன் நகர்  ராஜாங்கம், கொங்கு நகர் பகுதி  ஆர் சிவசக்தி,  கருவம்பாளையம் பகுதி  ஜி. சரவணன், 
நொய்யல் பகுதி   ஹைதர் அலி,   கோல்டன் நகர் ஒர்க் ஷாப் பாலு,  திருப்பூர் ஒன்றியம் வடக்கு செயலாளர்  ஆர் நாகேஸ்வரன் திருப்பூர் ஒன்றியம் வடக்கு  பனங்காடு ராஜேந்திரன்  
மாவட்ட அணி செயலாளர்கள்:மாவட்ட எம்ஜிஆர் மன்றம்  சீமாட்டி கு. குணசேகர். மாவட்ட இளைஞரணி இறை ஆர். வெங்கடேஷ், இதய தெய்வம் அம்மா பேரவை இணைச் செயலாளர்  ஆர்.பி.விஜயகுமார், மாவட்ட மாணவர் அணி என். சிவசக்தி,  அம்மா தொழிற்சங்க பேரவை எம். பாலகிருஷ்ணன், மகளிர் அணி  எம். திலகவதி,  தகவல் தொழில்நுட்ப பிரிவு (ஆண்கள்)  ஏ. பாபு பாஷா, வழக்கறிஞர் பிரிவு  யோக பிரியா, சிறுபான்மை நலப் பிரிவு  ஹெச். ஜான், விவசாய பிரிவு  சாமிநாதன்,  மருத்துவ அணி  என். அழகேந்திரன், மீனவர் அணி  வி. பச்சமுத்து,  இலக்கிய அணி  கே.பழனிச்சாமி,   அமைப்புசாரா ஓட்டுநர் அணி எல். முத்துசாமி, இளைஞர் பாசறை   டி. ஆர். சத்யா,  இளம் பெண்கள் பாசறை  ஹெச். ஹாஜிரா, பானு, தொழில்நுட்ப பிரிவு பெண்கள்  எஸ். பிரியா,  மாவட்ட வர்த்தக அணி எம். சண்முகசுந்தரம், மாவட்ட பொறியாளர் அணி காட்டன் பி. சக்திவேல், மாவட்ட நெசவாளர் பிரிவு ஆர். ஜெயராஜ் ,மாவட்ட மாற்றுத் திறனாளிகள் பிரிவு வி. ஜான் மென்டோன்ஷா, மாவட்ட சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு பிரிவு  கே மனோகரன், திருப்பூர் பனியன் தொழிலாளர்கள் நல சங்கம்  ஹெச். சுரேஷ் ராஜா,மாவட்ட சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு பிரிவு இணை செயலாளர்.  எஸ். வினுப்பிரியா,  இளம் பெண்கள் பாசறை  மகேஸ்வரி  ஷீபா, கலியமூர்த்தி, தங்க குமணன், சரஸ்வதி, பிரபு, ஆனந்த், சதீஷ்,  ஜெயகாந்த் மற்றும் கழக செயல் வீரர்களும் வீராங்கனைகளும், கலந்து கொண்டனர்.
Previous Post Next Post