இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இருமல் மருந்து குடித்த 18 உஸ்பெகிஸ்தான் குழந்தைகள் உயிரிழப்பு.! - உஸ்பெகிஸ்தானின் சுகாதார அமைச்சகம் குற்றசாட்டு.!

 

உஸ்பெகிஸ்தானின் சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில், இறந்த 18 குழந்தைகளும் நொய்டாவை தளமாகக் கொண்ட மரியன் பயோடெக் தயாரித்த Doc-1 Max என்ற இருமல் மருந்தை உட்கொண்டதாக குற்றச்சாட்டு தெரிவித்துள்ளது.

இந்த அறிக்கையைத் தொடர்ந்து இந்தியா விசாரணையைத் தொடங்கியுள்ளது. மேலும் மாதிரிகள் பரிசோதிக்கப்படும் வரை மருந்து நிறுவனத்தின் நொய்டா பிரிவில் இருமல் சிரப்பின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.

உஸ்பெகிஸ்தானின் சுகாதார அமைச்சகத்தின் அறிக்கையில் ஒரு தொகுதி சிரப்களின் ஆய்வக சோதனைகளில் "எத்திலீன் கிளைகோலின் ", என்னும் நச்சுப் பொருள் கண்டறியப்பட்டது. 

மருத்துவரின் பரிந்துரைச் சீட்டு இல்லாமலேயே குழந்தைகளுக்கு அவர்களின் பெற்றோர் அல்லது மருந்தாளுனர்களின் ஆலோசனையின் பேரில், குழந்தைகளுக்கான வழக்கமான அளவைத் தாண்டிய டோஸ்களுடன் இந்த சிரப் வழங்கப்பட்டதாகவும் அது கூறியது.

Ahamed

Senior Journalist

Previous Post Next Post