"ரிமோட் EVM இந்திய தேர்தல் ஜனநாயகத்தையே சீர்குலைத்து விடும்”- திருமாவளவன், எம்.பி.

 

66 மாநிலம் விட்டு மாநிலம் புலம்பெயர்ந்து வாழ்வோர், தாங்கள் இருக்கும் இடத்தில் இருந்தபடியே வாக்களிக்கும் விதமாக 'ரிமோட் எலக்ட்ரானிக் வோட்டிங் மெஷின்' அறிமுகம் செய்யப்படும் எனத் தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. இந்தியாவில் சுமார் 30 கோடி பேர் இப்படி புலம்பெயர்ந்து வாழ்கிறார்கள். அவர்களின் வாக்குகளை குறிவைத்தே இந்த எந்திரம் அறிமுகம் செய்யப்பட உள்ளது. ஏற்கனவே EVMகளில் பல்வேறு குளறுபடிகள் நடப்பதாக புகார்கள் எழுந்துள்ள நிலையில், | ரிமோட் எலக்ட்ரானிக் ஓட்டிங் மெஷின் | அறிமுகம் செய்தால் இந்திய தேர்தல் ஜனநாயகத்தையே அது சீர்குலைத்து விடும். எனவே, இந்த முயற்சியைக் கைவிட வேண்டும்!

திருமாவளவன், எம்.பி. வி.சி.க. தலைவர்

Ahamed

Senior Journalist

Previous Post Next Post