வீடு புகுந்து இளைஞர் வெட்டி கொலை.! - தூத்துக்குடியில் பரபரப்பு.!

தூத்துக்குடி அருகே உள்ள சங்கரப்பேரி பகுதியில் இளைஞர் ஒருவரை மர்ம கும்பல் ஒன்று வீடு புகுந்து வெட்டி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி அருகே உள்ள  ஹவுசிங் போர்டு காலனி கேடிசி நகர் பகுதியைச் சேர்ந்தவர் பழனிச்சாமி. இவருடைய மகன் கருப்பசாமி (வயது 27). இவர் சங்கரப்பேரி பகுதியைச் சேர்ந்த  பெண்னை சில ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்து  உள்ளார். நேற்று இரவு சங்கரபேரி வீட்டில் இருந்தபோது மர்ம கும்பல் வீட்டுக்குள் புகுந்து கத்தியால் குத்தி அரிவாள் மற்றும் கத்தியால் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த கருப்பசாமி சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக தகவல் அறிந்த சிப்காட் காவல் நிலைய போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைககு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக சிப்காட் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

போலீசார் மேற்கொண்ட விசாரணையில், கொலை செய்யப்பட்ட கருப்பசாமி கடந்த 2017 ஆம் ஆண்டு சங்கரப்பேரி பகுதியை சேர்ந்த அன்பு சாமி என்பவரை கட்டையால் அடித்து கொலை செய்துள்ளார். இது தொடர்பாக கைது செய்யப்பட்டு சிறையில் இருந்துள்ளார். பின்னர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு கடந்த டிசம்பர் மாதம் ஜாமினில் வெளி வந்துள்ளார். இந்நிலையில்  2017 ஆம் ஆண்டு கொலை செய்யப்பட்ட அண்புச்சாமியின் இரு மகன்கள் மற்றும் அவனது கூட்டாளிகள் இந்த கொலையை செய்திருக்கலாம் என்ற அடிப்படையில் போலீசார்  அவர்களை வலை வீசி தேடி வருகின்றனர். 

கொலை செய்யபட்ட கருப்பசாமி மீது கொலை வழக்கு உட்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. வீடு புகுந்து இளைஞர் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் தூத்துக்குடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Ahamed

Senior Journalist

Previous Post Next Post