மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்க நாள் - தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக சார்பில் மாபெரும் பொதுக்கூட்டம்.!

 

தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக சார்பில் மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்க நாள் மாபெரும் திமுக பொதுக்கூட்டம் சிதம்பரநகர் பேருந்து நிறுத்தம் எதிரில் நடைபெற்றது. மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளரும் மாநகராட்;சி மண்டலத்தலைவருமான வக்கீல் பாலகுருசாமி தலைமை வகித்தார். மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர்கள் சீனிவாசன், சங்கர், மாநகர துணை அமைப்பாளர்கள் டைகர் வினோத், ஸ்டாலின் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் பேசுகையில்:- 

தமிழ்மொழி பாதுகாக்க தமிழ்நாடு எனப்பெயர் வர ஜாதி மதம் பாராமல் வளர்த்த தமிழை பெரியார் அண்ணா காமராஜர் கலைஞர் வழியில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கட்டிக்காத்து வருகிறார். அதிமுக ஆட்சி காலத்தில் எடப்பாடி அடிமை ஆட்சியை செய்துக்கொண்டு ஒன்றிய அரசுக்கு தலையாட்டி பொம்மையாக செயல்பட்டார். ஜெயலலிதா இருந்த வரை தமிழகத்துக்கு எதிரான திட்டங்களை எதிர்த்தார். அவர் மறைவிற்கு பின்பு எல்லா உரிமையையும் விட்டுக்கொடுத்து மோடிக்கு அடிமை சாசனம் எழுதி கொடுத்து விட்டு பணியாற்றினார். தமிழ்நாடு என்று பெயர் வருவதற்கு சங்கரலிங்கனார் போராட்டம் நடத்தினார். கவர்னர் கூறிய கருத்துகளுக்கு கூட எடப்பாடி கருத்து தெரிவிக்கவில்லை. தமிழ் உணர்வும் இல்லை. அண்ணா திமுக என்ற பெயரை வைத்துக் கொண்டு அண்ணாவையே மறந்துவிட்டீர்கள். தமிழக முதலமைச்சரை சண்முகநாதன் ஒருமையில் பேசியுள்ளார். உங்கள் தலைவர் அப்படி தான் உங்களை வழிநடத்துகிறார். எங்கள் தலைவர் நாகரீகமாக பேசுவதற்கு வழிநடத்துகிறார். குருஸ்பர்னாந்துக்கு அரசு விழா மற்றும் மணிமண்டபம் கட்ட வேண்டும் என்று சட்டமன்றத்தில் நான் பேசியது குறிப்பில் உள்ளது. அதிமுக ஆட்சியில் அரசு விழா எடுக்கப்படும் என்று அறிவித்தது. மணிமண்டபம் அமைக்கப்படும் என்று தேர்தல் நேரத்தில் திமுக வாக்குறுதி கொடுத்தது. எம்பி தேர்தலின் போது கனிமொழியும் வாக்குறுதி கொடுத்தார். அதன்அடிப்படையில் மணி மண்டபம் கட்டப்படும் அறிவிப்பை முதலமைச்சர் அறிவித்தார். அதன்படி அவர்களது வாரிசு மற்றும் சமுதாய மக்கள் ஆதரவு படி எம்ஜிஆர் பூங்காவின் ஓருபகுதி அமைக்கப்படுகிறது. இதை கூட மறந்து அதிமுகவினர் ஏதேதோ பேசுகிறார்கள் சலவை தொழிலாளர்களுக்குரிய இடத்தில் அதிமுக ஆட்சிக்காலத்தில் கொண்டுவரப்பட்ட ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் சிமெண்ட் தளம் அமைத்து தேவையில்லாத பணிகளை மேற்கொண்ட போது எதிர்க்கட்சியாக இருந்த நாங்கள் அதை முடிந்தவரை தடுத்துப்பார்த்தோம். எடப்பாடி ஆட்சியில் கேட்கவில்லை. அவர்களது செய்த பாதிப்பணிகளை நாங்கள் தொடர்கிறோம். சட்டப்படிதான் பணிகள் நடைபெறுகிறது. முறைப்படி தான் ஏலம் மூலம் கடை வாடகைக்கு கொடுக்கப்படும் அதில் ஏதும் முறைகேடு நடைபெறவில்லை. மக்கள் ஆதரவு எடப்பாடிக்கோ மோடிக்கோ இல்லை. தன்னை முதலமைச்சராக்கிய சசிகலாவையே யாரென்று தெரியாது என்று கூறிய எடப்பாடிக்கு மக்களைப்பற்றி சிந்திக்கும் என்னம் கிடையாது. 2021 மே வரை ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகளுக்கு 207 கோடி வந்துள்ளது. அதன்பின் மொத்தமாக 588 கோடிக்கு பணிகள் நடைபெற்றுள்ளது. அதில் 280 கோடி மத்திய அரசு பங்களிப்பும் மீதி மாநில அரசு பங்களிப்பும் உள்ளது. 150 கோடி செலவில் பாதளசாக்கடை உள்ளிட்ட பல பணிகளுக்கு ஒதுக்கீடு மின்விளக்கு இல்லாத பகுதியில் மின்விளக்கு அமைப்பதற்கு 5 கோடி ஓதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 10 வருட அதிமுக ஆட்சியில் ரூரல் பகுதிகளில் எந்த பணியும் நடைபெறவில்லை. கனிமொழி எம்.பி ஆன பிறகு பல பணிகள் நடைபெற்றுள்ளன. கோவை, மைசூர், ரயில்கள் இயக்கப்படுகின்றன. தூத்துக்குடி வளர்ச்சிக்கு பர்னிச்சர் பார்க் மற்றும் இரண்டு தொழில் நிறுவனங்கள் வரவுள்ளது. உப்பளத் தொழிலாளர்களுக்கு மழைகாலங்களில் 5 ஆயிரம் வழங்கப்படுகிறது. கல்லூரி உதவித்தொகையாக புதுமைப்பெண் திட்;டத்தில் ரூ1000 வழங்கப்படுகிறது. தொழில் வளர்ச்சி தமிழ் கலாச்சாரம் கடந்த கால பாரம்பரியம் என அனைத்தையும் முதலமைச்சர் ஸ்டாலின் முழு ஈடுபாடோடு அதை பாதுகாத்து வருகிறார். கல்விக்கு மட்டும் 36 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஒன்றிய அரசுக்கு துணையாக இருப்பவர்களுக்கு மட்டும் பல உதவிகளை செய்து தமிழகத்தை புறக்கணிக்கின்றன. தமிழகத்தில் நடைபெறுகின்ற நல்லாட்சிக்கு முதலமைச்சரின் கரத்தை வலுப்படுத்த அனைவரும் துணை நிற்க வேண்டும். என்று பேசினார்.

மேயர் ஜெகன் பெரியசாமி பேசுகையில்:- மொழிக்காக உயர்நீத்தவர்களுக்கு நடைபெறுகின்ற கூட்டம்; இதே போல் தமிழ்நாடு பெயர் சர்ச்சையில் கவர்னர் கருத்துக்கு எதிராக ஒட்டு மொத்த தமிழகமும் எதிர்த்து குரல் கொடுத்தது. ஓரு மொழி போராட்டம் தான். கொரோனா காலக்கட்டத்தில் முதலமைச்சர் பதவியேற்ற போது 32ஆயிரம் கொரோனா இருந்ததை நிர்வாகத்திறமையின் மூலம் மக்களை பாதுகாத்து நிதிநிலைமையும் சமாளித்து தற்போது 100 சதவீதம் தமிழகம் வளர்ச்சியடைந்த மாநிலமாக முதலமைச்சர் மாற்றியுள்ளார். அரசியல் செய்ய வேண்டும் என்பதற்காக பிஜேபி தேவையில்லாத சித்து விiளாயாட்களை செய்கிறது. முன்னாள் அமைச்சர் சண்முகநாதன் மீது எனக்கு ஒருவிதமான மரியாதை உண்டு. காரணம் ஒரே இயக்கத்தில் இருப்பதால் அதை அவர் கெடுத்து கொள்ளும் விதமாக தமிழக முதலமைச்சரும் கழக தலைவருமான ஸ்டாலினையும் கனிமொழி எம்.பியையும் அமைச்சர் கீதாஜீவனையும் தரக்குறைவாக பேசியது மட்டுமின்றி மாநகராட்சி பகுதியில் நடைபெறும் பணிகள் குறித்து விபரம் புரியாமல் பேசியுள்ளார். ஒரு மனிதன் தவறு செய்தால் ஒரு முறை மன்னிப்பது வழக்கமான இயல்பு அதே போல் இந்த முறை விடுகிறேன் இனி தேவையில்லாமல் பேசினால் நடப்பது வேறு ஒருங்கிணைந்த தூத்துக்குடி நெல்லை மாவட்டமாக இருந்த போது ஆஸ்துரை கலெக்டராக பணியாற்றிவருக்கு பழைய துறைமுகம் அருகில் நினைவிடம் உள்ளது அந்த புனரமைப்பு சின்னமாக இருப்பதால் சில விதிமுறைகளின் படி பராமரிப்பு பணி மேற்கொண்ட போது அதிலும் பிஜேபி தூண்டுதலின் பேரில் அரசியல் செய்தனர். பின்னர் அதே போல் சலவை தொழிலாளர்களுக்குரிய இடத்திலும் இது போன்ற தேவையில்லாத அரசியலை என்னவென்று தெரியாமலேயே போராடினார்கள். 1986ல் எனது தந்தை நகர்மன்ற தலைவராக இருந்த காலத்தில் குரூஸ்பர்னாந்து சிலை அமைக்கப்பட்டது. மணி மண்டபம் கடற்கரை சாலையில் உள்ள ரோச் பூங்கா பகுதியில் அமைக்கப்படும் என்று அரசு அறிவித்தது. அதையும் சிலர் அரசியில் தூண்டுதலின் பேரில் மாவட்ட கலெக்டரால் நான்கு இடம் அடையாளம் காட்டப்பட்டு பாளைரோட்டில் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் அவர்களுடைய ஒப்புதலின் பெயரில் அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. இதையெல்லாம் தெரியாமல் அரசியல் செய்வதாக எதிர்கட்சிகள் சிலரை துண்டிவிட்டு பேசிவருகின்றனர். சலவை தொழிலாளர்களுக்கு என்று 1957ல் காமராஜர் காலத்தில் நகராட்சி தலைவர் பெயரில் 10 ஏக்கர் இடம் வழங்கப்பட்டு அவர்கள் பயன்படுத்தி வந்தனர். அதில் குளம் மற்றும் துணி துவைப்பதற்கு என மாநகராட்சி எல்லாம் செய்து கொடுத்திருந்தது அதில் 20 லட்சம் ஒருகடைக்கு நான் பெற்றுவிட்டதாக சண்முகநாதன் கூறியுள்ளார். அதற்கு முறையாக டெண்டர் மூலம் தான் ஏலம் விடப்படும் இதையும் புரிந்து கொள்ளாமல் எதிர்கட்சியினர் அரசியல் செய்து கொண்டு நீதிமன்றம் வரை சென்று வந்துள்ளனர். இது சம்பந்தமாக முதலமைச்சர் கலெக்டர் என அனைவருக்கும் கொடுக்கப்பட்ட புகார் மனுக்கள் ஆணையருக்கு வந்துள்ளன. சட்டப்படி தான் அனைத்து பணிகளும் நடைபெறுகிறது. உள்ளாட்சி பணிகளை மேற்கொள்ள ஓரு திட்டம் தயாரிக்கப்பட்டு உள்ளாட்சி துறை அமைச்சருக்கு நாங்கள் அனுப்புவதை அவர் நிதி அமைச்சரிடம் பேசி முதலமைச்சரின் ஒப்புதல் பெற்ற பின்பு தான் சில நிதி ஓதுக்கீடுகள் வழங்கப்படும். அதிமுக ஆட்சியில் நீரோடையை சீரமைக்க பல கோடிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு எந்த பணியும் முறையாக நடைபெறவில்லை. நாங்கள் பொறுப்பேற்றபின் மக்கள் நலன் கருதி பல நாட்களுக்கு ஒருமுறை வந்த குடிதண்ணீரை வல்லநாடு சென்று ஆய்வு செய்து தினமும் வழங்கி கொண்டு வருகிறோம். 278 கோடி நான்காவது குடிநீர் திட்டத்திற்கு அதிமுக ஓதுக்கி அதில் முறையாக பல பணிகள் நடைபெறாமல் நடைபெற்;ற தாக தெரிவித்துள்ளனர். அதில் நடைபெற்ற முறைகேடுகளுக்கும் விசாரனை கமிஷன் அமைக்கலாமா என்று ஆய்வு செய்து வருகிறோம். தூத்துக்குடியில் 13 பேரை சுட்டு கொன்ற அதிமுக அரசு இன்று வரை அந்த மக்களுக்கு ஆறுதல் கூற எடப்பாடி வரவில்லை. அதனால் கடந்த காலத்தில் நடைபெற்ற தேர்தலில் தமாகாவிற்கு இத்தொகுதியை பணம் பெற்றுக் கொண்டு சண்முகநாதன் தள்ளிவிட்டார். எடப்பாடியும் சண்முகநாதனும் கொள்ளையடித்த பணத்தை தூத்துக்குடி மாநகர வளர்ச்சிக்கு கொடுத்து உதவலாம் முதலமைச்சர் ஸ்டாலின் தூத்துக்குடியில் பிரையண்ட்நகர் முத்தம்மாள் காலணி ரஹ்மத்நகர் அம்பேத்கர் நகர் போன்ற இடங்களில் மழைகாலங்களில் தேங்கிய நீரால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்து எங்களுக்குரிய அறிவுரையின் படி புதிய கால்வாய்கள் அமைக்கபப்பட்டுள்ளது. இனி எந்த மழை பெய்தாலும் தூத்துக்குடியில் தண்ணீர் தேங்காது. மக்களின் பொழுது போக்கு பூங்காக்களை நல்லமுறையில் பாராமரித்து வருவதால் பலரும் பயனடைந்து வருகின்றனர். ஏழைகளின் சிரிப்பில் இறைவனை காண்பதில் தான் மகிழ்ச்சி அதனடிப்படையில் தான் இன்னும் சில மாதங்களில் உலக நாடுகளை விட சூப்பராக தூத்துக்குடி அமையும் 50 கிலோ மீட்டர் தூரத்திற்கு புதிய சாலைகள் அமைக்கப்படவுள்ளது. 4700 தெருக்கள் அமைந்துள்ள பகுதி முழுமையாக சீரமைக்கப்படும் 21 22ம் ஆண்டு மாநகராட்சிக்கு 98 கோடி 22 23ம் ஆண்டுக்கு 144 கோடி பல வளர்ச்சி பணிகளுக்கு வந்துள்ளது. பல இடங்களில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள இடத்தை மாநகராட்சி நிர்வாகம் மீட்டுள்ளது. இவ்வாறு மேயர் பேசினார்.

முன்னாள் மத்திய இணை அமைச்சர் வெங்கடபதி, மாநில பேச்சாளர் துரைபாண்டி, மாவட்ட பொருளாளர் ரவீந்திரன், உள்பட பலர் பேசினார்கள்.

கூட்டத்தில் மாநில மீனவரணி துணை செயலாளர் புளோரன்ஸ், துணை மேயர் ஜெனிட்டா, மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ், துணைச்செயலாளர்கள் ராஜ்மோகன் செல்வின், ஆறுமுகம். பொதுக்குழு உறுப்பினர்கள் கோட்டுராஜா, ஜான் அலெக்ஸாண்டர், ராஜா, மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், துணை செயலாளர்கள் கீதாமுருகேசன், கனகராஜ், பிரமிளா, பகுதி செயலாளர்கள் ஜெயக்குமார், நிர்மல்ராஜ், சுரேஷ்குமார், ரவீந்திரன், ராமகிருஷ்ணன், மேகநாதன், மாநகராட்சி மண்டலத்தலைவர் கலைச்செல்வி, மாவட்ட அணி அமைப்பாளர்கள் மதியழகன், ரமேஷ், அன்பழகன், கஸ்தூரிதங்கம், அந்தோணி ஸ்டாலின், உமாதேவி, துணை அமைபப்பாளர்கள் பிரதிப், அந்தோணி கண்ணன், ராமர், பார்வதி, நாகராஜன் பாபு, சின்னத்துரை, மாநகர அணி அமைப்பாளர்கள் அருண்குமார், பிரபு, ஜெயக்கனி, முருகஇசக்கி, துணை அமைப்பாளர்கள் அருண்சுந்தர், வக்கீல் கிறிஸ்டோபர் விஜயராஜ், மாவட்ட பிரதிநிதிகள் சக்திவேல், நாராயணன், சேர்மபாண்டியன், செந்தில்குமார், கவுன்சிலர்கள் தெய்வேந்திரன், சரவணக்குமார், இசக்கிராஜா, நாகேஸ்வரி, ஜெயசீலி, பவாணி மார்ஷல், ஜான்சிராணி, கந்தசாமி, வைதேகி, முத்துவேல், ராஜதுரை, பட்சிராஜ், விஜயகுமார், வட்டச்செயலாளர்கள் சுப்பையா, ரவீந்திரன், வன்னிராஜ், கீதாசெல்வமாரியப்பன், செல்வராஜ், சிங்கராஜ், மகளிர் அணி ரேவதி, சத்யா, மற்றும் கருணா அல்பட், மணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

முன்னதாக அமைச்சர் கீதாஜீவன் தியாகிகளுக்கு வீரவணக்கம் தியாகிகளை வணங்குவோம் என்று கூறி உறுதிமொழியை அனைவரும் ஓருமித்த குரலுடன் வீரவணக்கம் தெரிவித்தனர்.

Ahamed

Senior Journalist

Previous Post Next Post