திருமுருகன்பூண்டி திருமுருகநாதசாமி கோவில் தேர்த்திருவிழா தொடங்கியது... பஞ்சவாத்தியம் முழங்க கோலாகலமாக நடந்த கொடியேற்றம்!

திருப்பூர் மாவட்டம், திருமுருகன்பூண்டியில் உள்ள திருமுருகநாதசாமி கோவில் பிரசித்தி பெற்ற கோவிலாகும். கொங்கு ஏழு சிவ ஸ்தலங்களில் ஒன்றாகவும், மன நோய் தீர்க்கும் புனிதத் தலமாகவும் இந்த கோவில் விளங்குகிறது. முருகப்பெருமான் வழிபட்ட தலமானதால் இந்த தளம் திருமுருகநாதசுவாமி திருக்கோவில் எனப்படுகிறது. இப்படிப்பட்ட சிறப்பு மிக்க திருமுருகன்பூண்டி திருமுருகநாதசாமி கோவில் தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி உள்ளது.

இதில், முதல் நாள் நிகழ்ச்சியாக இன்று காலை 10 மணிக்கு, விநாயகர் பிரார்த்தனை, மிருத்யங்க யாகம், அங்குரார்ப்பனம், ரிஷ்ப யாகம்  நடைபெற்றது. தொடர்ந்து, விநாயகர், வள்ளி, தெய்வானை, திருமுருகநாதர், பார்வதி, சண்டிகேசுவரர் ஆகிய சுவாமிகளுக்கு அபிஷேக அலங்கார தீபாராதனைகள் நடைபெற்றது. முன்னதாக திருமுருகநாதசுவாமி கோயிலில் உள்ள கொடி மரம் சுத்தம் செய்யப்பட்டு, கொடித்துணியில், அதிகாரநந்தி, சூரியன், சந்திரன், அஸ்திர தேவர் ஆகியவை வரையப்பட்டு பூமாலை அணிவித்து, திருக்கொடிக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.

 திருக்கொடி கோயிலுக்குள் பிரகார உலாவந்து பஞ்ச வாத்தியங்கள் முழங்க, கொடி ஏற்றப்பட்டது. 

இந்த விழாவில் மார்ச் - 4 ம் பஞ்சமூர்த்திகள் திருவீதி உலா நடைபெற உள்ளது..  மார்ச் - 5 திருக்கல்யாணம்  நடைபெறுகிறது. மார்ச் 6-ம் அதிகாலை மக நட்சத்திரத்தில், யாகவேள்வியுடன் சுவாமிக்கு, அபிஷேக அலங்கார மகாதீபாராதனைகள் நடைபெற்று, விநாயகர், திருமுருகநாதசுவாமி,  வள்ளி, தெய்வானை, பார்வதி, சண்டிகேசுவரர் ஆகிய பஞ்சமூர்த்திகள் தேரில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.  மாலை 3 மணிக்கு திருமுருகநாதர் திருத்தேர் வடம் பிடித்து இழுத்தலும், மார்ச் - 7ம் மாலை 3 மணிக்து திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சியும்  நடைபெறவுள்ளது. மார்ச் 8-ம் தேதி பரிவேட்டை, குதிரைவாகனம், சிம்ம வாகனக்காட்சிகளும், தெப்பத்தேர் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

 மார்ச் - 9ம் தேதி இரவு 7 மணிக்கு, ஸ்ரீசுந்தரர் வேடுபறி திருவிழாவும், மார்ச் 10 -ம் தேதி பிரம்மதாண்டவ தரிசனக் காட்சியும், மார்ச்.27ம் தேதி மஞ்சள் நீர் திருவிழாவும் நடைபெற்று, இரவு மயில் வாகனக்காட்சியுடன் தேர் திருவிழா நிறைவடைகிறது. தேர்த்திருவிழாவையொட்டி, திருக்கோவில் வளாகத்தில் கலையரங்கத்தில், தினமும் இரவு 7 மணிக்கு கலை நிகழ்ச்சிகள் நடைபெறுவுள்ளது.விழா ஏற்பாடுகளை, திருமுருகநாதசுவாமி திருக்கோயில் தக்கார் பெரிய மருது பாண்டியன், செயல் அலுவலர் விமலா ஆகியோர் செய்து வருகின்றனர்.

Previous Post Next Post