அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டது செல்லும் - உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு.!

 

அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டது செல்லும் என உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நீதிபதிகள் தினேஷ் மகேஷ்வரி, ரிஷிகேஷ் ராய் அமர்வு பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.

ஜூலை 11 பொதுக்குழுவில் கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளராக ஈபிஎஸ் தேர்வு செய்யப்பட்டார். 

ஜூலை 11 பொதுக்குழுவில் ஓபிஎஸ் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் அதிரடியாக நீக்கப்பட்டார்

பொதுக்குழு முடிவை எதிர்த்து, ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கில், பொதுக்குழு செல்லாது, இரட்டைத் தலைமையே தொடரும் என தனி நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.

தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து ஈபிஎஸ் தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கில், பொதுக்குழு செல்லும் என இரு நீதிபதிகள் அமர்வு தீர்ப்பு வழங்கியது.

உயர்நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் ஓபிஎஸ் மேல்முறையீடு செய்தார்.

அதிமுக பொதுக்குழுவுக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

தீர்ப்பு மூலம் எடப்பாடி தரப்பு அதிமுகவை கைப்பற்றியுள்ளது. இது ஒபிஎஸ் தரப்புக்கு கடும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

Ahamed

Senior Journalist

Previous Post Next Post