திருப்பூர் கே.வி.ஆர்., நகரில் வரிசையாக கடைகளை உடைத்து கொள்ளை... மளிகை கடை படியில் மலம் கழித்து அட்டூழியம் செய்த ‘மெண்டல்’ திருடன்

திருப்பூர் மாநகரில் உள்ள கே.வி.ஆர்.நகர் பகுதியில் மேற்கு மெயின் ரோட்டில்  ஆறு கடைகளை கொண்ட திருமலை காம்ப்ளக்ஸ் என்ற வணிக வளாகம் உள்ளது. இதில் மளிகை கடை, துணிக்கடை, பேன்சி கடை, இ சேவை மையம் மற்றும் முடிவெட்டும் சலூன் கடைஎன ஐந்து கடைகள் செயல்பட்டு வருகிறது. ஒரு கடை காலியாக உள்ளது. 

இதே வீதியில்  சிறிது தூரத்தில் திருப்பூர் மத்திய காவல் நிலையம் அமைந்துள்ளது. இந்நிலையில் நேற்று  கடைகளில் உள்ள பூட்டை உடைத்து உள்ளே கல்லாப்பெட்டியில் வைத்திருந்த பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர். இதில் மளிகை கடையில் திருடும்பொழுது அங்கிருந்த சாக்லேட்டுகளை எடுத்து சாப்பிட்டு உள்ளனர். மேலும் கடைக்கு வெளியே படியில் மலம் கழித்து விட்டும் சென்றுள்ளனர்.

பொருளையும் இழந்த நிலையில் மளிகைக்கடை படியில் மலம் கழித்து விட்டு சென்ற திருடன் மளிகை கடைக்காரருக்கு பெரும் மன உளைச்சலை ஏற்படுத்தி உள்ளான். 

 காலையில் கடை  திறக்க உரிமையாளர்கள் வந்து பார்த்தபொழுது அனைத்து கடையும் பூட்டுகளும் உடைக்கப்பட்டு கொள்ளை போனது தெரியவந்தது. இதனை அடுத்து கடை உரிமையாளர்கள் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த திருப்பூர் மத்திய காவல் நிலைய போலீசார் தடயவியல் நிபுணர்களின் உதவியுடன் கொள்ளையன் குறித்து விசாரித்து வருகின்றனர்.

 அருகிலுள்ள கடைகளின் சிசிடிவி கேமரா பதிவில் அவ்வழியாக கடப்பாரையை எடுத்துக்கொண்டு ஒரு வாலிபர் நடந்து செல்வது பதிவாகியுள்ளது.  பதிவானதை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.  மத்திய காவல் நிலையம் அமைந்துள்ள அதே வீதியில் சிறிது தூர இடைவெளியில் நடைபெற்றுள்ள இந்த துணிகர கொள்ளை சம்பவம் அப்பகுதி பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Previous Post Next Post