சத்தியமங்கலம் அருள்மிகு பண்ணாரி மாரியம்மன் குண்டம் திரு விழா-பாதுகாப்பு பணியில் 1,650 போலீசார்

 ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம், பண்ணாரியில்,பிரசித்திபெற்ற, அருள்மிகு பண்ணாரி மாரியம்மன் குண்டம் திருவிழா செவ்வாய் கிழமை  நடைபெற உள்ள நிலையில், விழாவையொட்டி, பண்ணாரி மாரியம்மன் கோவிலில் 1,650 போலீசார் பாதுகாப்பு பணி யில் ஈடுபடுத்தபட வுள்ளனர்.


குண்டம் திரு விழா கடந்த 20-ந் தேதி இரவு பூச்சாட்டுதலுடன் துவங்கியது. இதைத் தொடர்ந்து, அம்மன் சப்பரத் தில் எழுந்தருளி, சப்பர திருவீதி உலா, கடந்த 21-ந் தேதி இரவு முதல் பண்ணாரி மற் றும் சத்தியமங் கலத்தை சுற்றி யுள்ள, 100க்கும் மேற்பட்ட கிராமங் களில்நடைபெற்று கடந்த 28-ந்தேதி இரவு கோவிலை சென்றடைந்தது. இதையடுத்து கோவில் வளாகத் தில் குழி கம்பம் சாட்டப்பட்டது.

குண்டம் திருவிழா வின் முக்கிய நிகழ்வான குண்டம் இறங்கும் நிகழ்ச்சி நாளை செவ்வாய்க் கிழமை அதிகாலை 4 மணிக்கு நடைபெறுகிறது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு குண்டம் இறங்கி நேர்த்திகடன் செலுத்த, ஞாயிற்றுகிழமை அதிகாலை முதலே, குண்டம் இறங்க வரிசை யில் காத்திருக்கி ன்றனர். 

மேலும் பாதயாத்திரையாக, ஆண்களும், பெண்களும், விரதமிருந்து நடைபயணமாக குண்டம் இறங்க வந்தவண்ணம் உள்ளனர். லட்சக் கணக்கான பக்தர் கள் வருகை புரி வார்கள் என்ப தால், பண்ணாரி மாரியம்மன் கோவிலில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. விழாவையொட்டி மாவட்ட போலீஸ் காவல் கண்காணிப்பாளர் டாக்டர். சசி மோகன் தலைமை யில், 4 கூடுதல் காவல் கண்காணி ப்பாளர்கள், 13 துணை காவல் கண்காணிப்பாளர்கள் 40 இன்ஸ் பெக்டர்கள் மற்றும் பெண் போலீசார் என மொத்தம் 1,650 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். அது மட்டுமின்றி, மாறுவேடத்திலும் போலீசார், பாது காப்பு பணியில் ஈடுபடவுள்ளனர். 200சிசிடிவி கேமராக்கள் பொறுத்தப்பட்டு, குற்றச் சம்பவங் கள் ஏதும் நிகழா வண்ணம்,தீவிர காவல் கண் காணிப்பு பணி யும், மேலும் 3 உயர்கோபுரம் அமைக்கப்பட்டு, அதன் மூலமும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

பொதுமக்களுக்கு உதவுவதற்கு வசதியாக 3 காவல் உதவி மையங்களும் ,போலீசாரால் ஏற்படுத்தப்பட்டு உள்ளன. குண்டம் இறங்காத பக்தர் கள், நேரிடையாக அம்மனைதரிசிக்க வசதியாக, இந்த ஆண்டு தனி வழி யும் ஏற்படுத்தப் பட்டு உள்ளது. இதை பக்தர்கள் பெரிதும் வரவேற் றுள்ளனர்.

கோவில் விழாவுக்கு வரும் பக்தர் கள் வசதிக்காக, 3 இடங்களில் தற்காலிக பஸ் நிலையங்களும், 15 இடங்களில் கார், பைக் வேன், கனரக வாகன

ங்கள் நிறுத்த ஏற்பாடும் செய்யப்பட்டு உள்ளது. தீயணைப்பு வாகனங்கள் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளன. குண்டம் திருவிழாவை யொட்டி, இன்று (திங்கள்) மாலை 3 மணி முதல் நாளை செவ்வாய் மாலை 3 மணிவரை திம்பம் மலைப்பாதை வழியாக கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப் பட்டுள்ளது.

Previous Post Next Post