அரசுப்பள்ளி மாணவர்கள் பொருளாதார சூழலால் பின் தங்கி விடக்கூடாது என உழைத்து வரும் தலைமை ஆசிரியர் தாட்சாயினி.....

 ஈரோடு மாவட்டம் சிவகிரியில்  அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது.  இப் பள்ளியில் 500 மாணவர்கள் படித்து வருகின்றனர்.  இப்பள்ளியின் தலைமை ஆசிரியை யாக  தாட்சாயினி  பணியாற்றி வருகிறார்.



இவர் தலைமை ஆசிரியராக பொறுப்பேற்ற உடனே  பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்காகவும் அவர்களின் கல்வி தரம் உயர்வதற்காகவும், ஆண்டுக்கு ஒரு லட்சம் செலவு செய்வது என முடிவெடுத்துள்ளார். அதன்படி கடந்த மூன்று ஆண்டுகளாக தொடர்ந்து அதற்கான பணிகளை செய்து வருகிறார்.


     


 இவர் சிவகிரி பள்ளியில் முதல் பணியினை சத்துணவு கூடத்தில் மாணவர்கள் அமர்ந்து சாப்பிட சத்துணவு கூடத்தை ரூ 50,000 மதிப்பீட்டில்புனரமைத்து உள்ளார்.


 பள்ளியின் கட்டடத்திற்கு வர்ணம் பூச  ரூ 60,000 தனது சொந்த செலவில் நிதியாக அழைத்துள்ளார்.



 பள்ளியில் பயிலும் அனைத்து மாணவர்களுக்கும்   பிளாஸ்டிக் பயன்பாட்டினை தடுத்திட  தண்ணீர் பாட்டில்களுக்கு மாற்றாக  எவர்சில்வர் தண்ணீர் பாட்டில்களை

 ரூ 88,000 சொந்த நிதியிலிருந்து அனைத்து மாணவர்களுக்கும் வழங்கி உள்ளார்..


 மேலும் இவர் கூறுகையில்  இவரின் தலைமை பண்பை அறிந்து பெற்றோர்கள்  குழந்தைகளை பள்ளியில் சேர்த்ததின் மூலமாக கடந்த ஆண்டை விட நடப்பு ஆண்டு சதவீதம் அதிகரித்துள்ளது என குறிப்பிட்டுள்ளார்.


 திறமையான மாணவர்கள் பொருளாதார சூழலால் பின்தங்கி விடக்கூடாது என்பதற்காக பல்வேறு உதவிகளை செய்து வருகிறார். மாணவர் ஒருவர் பாடம் கற்க ஸ்மார்ட் போன் ஒன்றை வாங்கி கொடுத்திருக்கிறார் என தெரிவித்தர்.



 பள்ளி மாணவர்களின் நலனை  உயர்ந்த இடத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்கத்துடன் செயலாற்றி வரும்  சிவகிரி தலைமை ஆசிரியர் தாட்சாயணி அவர்களுக்கு பள்ளி மாணவர்கள் பெற்றோர்கள்  தங்களின் ஆதரவு மற்றும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.


தமிழ் அஞ்சல் செய்திகளுக்காக  பூபாலன்.......

Previous Post Next Post