ஆளுநர் விழாவில் செய்தியார்களைப் புறக்கணித்த சேலம் பெரியார் பல்கலைக்கழகம்

சேலம் பெரியார் பல்கலைக்கழத்தில் 28.06.23 புதன்கிழமையன்று நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் கலந்து கொள்கிறார் என்ற அறிவிப்பினைத் தொடர்ந்து செய்தியாளர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு செய்தி சேகரிக்க அடையாள அட்டை வழங்க பெரியார் பல்கலைக்கழகம் அழைப்பு விடுத்திருந்தது அதனைத் தொடர்த்து செய்தியாளர்கள் பெரியார் பல்கலைக்கழத்தில் அமைந்துள்ள மக்கள் தொடர்பு அலுவலகத்திற்கு சென்று இரண்டு புகைப்படம் மற்றும் தாங்கள் பணிப்புரியும் பத்திரிக்கைச் செய்தியாளர் அடையாள அட்டை நகலையும் மக்கள் தொடர்பு அலுவலகரிடம் கொடுத்துவிட்டு தங்களுக்கான நிகழ்ச்சி நுழைவு அடையாள அட்டையை உறுதி செய்துவிட்டு வந்துவிட்டார்.ஆனால் நிகழ்ச்சியன்று ஒரு குறிப்பிட்ட ஊடகவியாளர்களுக்கும் செய்தியாளர்களுக்கு மட்டுமே நிகழ்ச்சி செய்தி சேகரிப்பதற்கான நுழைவு அடையாள அட்டை கொடுத்து மற்ற செய்தியாளர்களை அவமானப்படுத்தியுள்ளது.இந்த சம்பவம் மிகவும் கண்டிக்கதக்கது. பெரியார் பல்கலைக்கழகத்தின் ஒருதலைப்பட்சமான இந்த முடிவால் செய்தியாளர்கள் அவமானப்பட்டு நிற்கும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள்      பெரியார் பல்கலைக்கழகம் பத்திரிகையாளர்களிடையே பிரித்தாலும் சூழ்ச்சியை உருவாக்கும் வகையில் சிறிய பத்திரிகை பெரிய பத்திரிகை என்ற பாகுபாட்டை விதைத்து வெளி மாவட்டத்தில் இருந்து வெளியாகும் சேலம் பத்திரிகை நிருபர்களை புறக்கணித்து இருப்பது, ஒற்றுமையாக இருக்கும் பத்திரிகையாளர்களுக்கு இடையே பிரித்தாலும் சூழ்ச்சியை முறியடிப்பதற்காக புறக்கணிக்கப்பட்ட அனைத்து பத்திரிகையாளர்களும் சேலம் மாவட்ட ஆட்சியரை சந்தித்து புகார் தெரிவிப்பது என முடிவு செய்யப்பட்டுள்ளது.

Previous Post Next Post