பேரூர் தெய்வதமிழ் ஆகம வேத பாடசாலையில் சேர விண்ணப்பிக்கலாம்

கோவை பேரூர் ஆதீனம் சார்பில் தொடங்கப்பட உள்ள தெய்வத் தமிழ் ஆகம பாடசாலையில் சேர விரும்புபவர்கள் ஆகஸ்ட் 25ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது கோயம்புத்தூர் மாவட்டம் பேரூர் தமிழ் கல்லூரி 1953இல் தொடங்கப்பட்டது அப்போதைய பேரூராதீனம் சாந்தலிங்க ராமசாமி அடிகளார் அனைவரும் அர்ச்சகராக வேண்டும் என விரும்பினார் தற்போது ஆதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளார் இந்து சமய உயர்மட்ட குழு உறுப்பினராக இருப்பதுடன் அனைவரும் அர்ச்சகர் ஆகலாம் திட்ட குழு பொறுப்பாளராகவும் உள்ளார் அந்த வகையில் முந்தைய ஆதீனத்தின் எண்ணத்தை நிறைவேற்றும் பொருட்கள் பேரூர் ஆதீனத்தில் தெய்வத்தமிழ் ஆகம பாடசாலை தொடங்கப்பட உள்ளது இது ஓராண்டு சான்றிதழ் படிப்பாகும் திருமுறை சாஸ்சாத்திரங்கள், தமிழ்நெறி வழிபாடு, கோயில் கலை, ஜோதிடம் ஆகியவை கற்று கொடுக்கப்படும் விண்ணப்பதாரரின் கல்வித் தகுதி ஐந்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் 12 வயதிற்கு மேற்பட்ட 16 வயதிற்கு உட்பட்ட இருபாலரும் இதில் சேரலாம் உணவு சீருடை தங்கும் விடுதி ஆகியவை இலவசமாக வழங்கப்படும் பாடசாலையில் தங்கிப் பயிலும் மாணவர்களுக்கு மாதம் ரூபாய் 1250 ஊக்கத்தொகையாக வழங்கப்படும் இதில் சேர்ந்து பயில  விரும்புவர்கள் ஆகஸ்ட் 25ஆம் தேதிக்குள் விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும் விண்ணப்பம் கூடுதல் விவரங்களுக்கு பொறுப்பாசிரியர்.      வே. தினேஷ் :9698816416 என்ற எண்ணில் தொடர்பு கொள்ள வேண்டுமாய் தனது செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
Previous Post Next Post