நெய்வேலியில்,பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கைது - சத்தியமங்கலத்தில், பாமகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்.



நெய்வேலி நிலக்கரி சுரங்க விரிவாக்கத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும்,விவசாய விளை நில ங்களை,கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்தும், என்எல்சி நிர்வாகமே, தமிழகத்தை விட்டு வெளியேறு என் கிற கோரிக்கைகளை வலியுறுத்தி, நெய்வேலியில் பாட்டாளி மக்கள் கட்சி யின் மாநில தலைவர், மருத் துவர் அன்புமணி ராமதாஸ் தலை மையில் நெய்வேலி என்எல்சி அலு வலகத்தை முற்றுகையிடும் போரா ட் டம் நடைபெற்றது. இப் போராட்டத் தில்,ஆயிரக்கணக்கானவர்கள் பங் கேற்ற நிலையில், பாமக தலைவர் அன்பு மணி ராம தாஸ் மற்றும் முக் கிய நிர்வாகி களை காவல்துறை கைது செய்து, நெய்வேலியில், தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்.கைது செய்யப்பட்ட மருத்துவர் அன்புமணி ராமதாஸ் மற்றும் நிர்வாகிகளை விடுதலை செய்யக் கோரி, தமிழகம் முழுவதும் பாட்டாளி மக்கள் கட்சி யின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இதன் ஒரு பகுதியாக ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் பேருந்து நிலையம் முன்பு, பாட்டாளி மக்கள் கட்சி ஈரோடு மாவட்ட செய லாளர் எஸ். கே. ராஜா மற்றும் மாவ ட்டத் தலைவர் மாரி முத்து, மாவட்ட பொருளாளர் ஜெயலட்சுமி ஆகி யோர் தலைமையில்,பாட்டாளி மக் கள் கட்சி மாநில செயற்குழு உறுப் பினர் ராதாஸ் பாலு,மாவட்ட வன்னி யர் சங்க செயலாளர் சசிமோகன் முன்னிலையில், கண்டன ஆர்ப்பாட் டம் நடை பெற்றது. இதில் பாட்டாளி மக்கள் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு போராட்டத்தில் ஈடுபட்ட னர். நிறைவாக ஜான் சார்லஸ் நன்றி கூறினார்.

Previous Post Next Post