நிலவில் கால் பதித்தது சந்திரயான் - 3... வெற்றி கரகோஷமிட்ட விஞ்ஞாணிகள்!

 விண்வெளி ஆராய்ச்சியில் 50 ஆண்டுகளுக்கு முன் குட்டிப்பையனாக இருந்த இந்தியா இன்றைக்கு விண்வெளி ஆராய்ச்சியில் உலக நாடுகள் மூக்கில் விரல் வைக்குமளவுக்கு ஜாம்பவானாக உருவெடுத்து வருகிறது. 1969 ல் ஆர்யபட்டா என்ற செயற்கை கோளை ரஷ்யா மூலமாக விண்ணில் செலுத்திய இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி திட்டத்தில்  2014 ல் மங்கள்யான் ஒரு முக்கிய மைல் கல்லாக அமைந்தது.

2014 செப்டம்பர் 24 ஆம் தேதி மங்கள்யான் விண்கலத்தை செவ்வாய் கோளின் சுற்றுப்பாதையில் நிறுத்தி செவ்வாய்க்கு விண்கலன் அனுப்பிய முதல் நாடு என்ற பெருமையை பெற்றது. இந்தியா. அதுவும் மிக குறைந்த செலவில் இந்த சாதனையை இந்தியா செய்தது. அதன் பிறகு பல்வேறு செயற்கை கோள்கள் அனுப்பப்பட்டன.

சந்திரயான் 2 திட்டத்தில் சந்திரனுக்கு அனுப்பப்பட்ட லேண்டர் திட்டம் தோல்வியை தழுவியது.

இந்த நிலையில் இன்றைய மாலை நேரத்தை இந்தியா சந்திரயான் 3 விண்கலம் இறங்கும் நேரமாக தேதி குறித்தது. ஏற்கனவே சந்திராயன் 2 திட்டத்தில் பாடம் கற்றுக்கொண்ட இந்தியா சந்திரயான் 3 திட்டத்தில் குறைகளை சரி செய்தது.

உலகமே சந்திரயான் 3 திட்டத்தை எதிர்பார்த்து காத்திருந்த நிலையில் வெற்றிகரமாக சந்திரயான் 3 விக்ரம் லேண்டர் உந்து சக்தி மூலமாக மெதுவாக தரையிறங்கியது.ஆர்ட்டிஃபிஷியல் இண்டெலிஜென்ஸ் தொழில்நுட்பம் உள்ளிட்ட தொழில்நுட்பங்கள் மூலமாக சந்திரயான்3 மென் தரையிறக்கம் செய்யப்பட்டது. 

  இதன்மூலமாக உலகில் சந்திரனின் தென் துருவத்தில் கால் பதித்த முதல் நாடு என்ற பெருமையை பெற்றது இந்தியா. ஏற்கனவே 3 நாடுகள் நிலவின் வடக்கு பகுதியில் தங்களது விண்கலனை இறக்கி உள்ளது குறிப்பிடத்தக்கது. இஸ்ரோவின் மையத்தில் விஞ்ஞாணிகள் கரகோஷம் எழுப்பி வெற்றியை கொண்டாடினார்கள்.

இந்தியா சந்திரன் மீது இறங்கியது என இஸ்ரோ தலைவர் சோம்நாத் பெருமிதம் தெரிவித்துள்ளார். 

ஜோகன்னஸ்பெர்க்கில் இருந்து நேரலையில் பார்த்த பிரதமர் மோடி விஞ்ஞாணிகளுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். 

16 ஆயிரம்\விஞ்ஞாணிகள் பணி புரியும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் இன்றைய தினம் உலகத்தையே திரும்பி பார்க்க வைத்துள்ளது.

சந்திரயான் 3 விண்கலம் மூலமாக நிலவின் தென்   பகுதியை இந்தியா முழுவதுமாக ஆய்வு செய்ய உள்ளது. 



Previous Post Next Post