300 பெண்கள் பங்கேற்ற பவளக்கொடி கும்மி ஆட்டம்

 திருப்பூர் போயம்பாளையத்தில் நடைபெற்ற 66 வது பவளக்கொடி கும்மி ஆட்ட அரங்கேற்றத்தில் 300க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்று கும்மி ஆடினார்கள். 

திருப்பூர், கோவை, ஈரோடு மாவட்டங்களில் பாரம்பரிய கும்மி ஆட்டம் பெரும் எழுச்சி பெற்று வருகிறது. கோவில் விழாக்கள், முக்கிய நிகழ்ச்சிகள் உள்பட பல்வேறு விழாக்களில் இடம்பெறும் கும்மி ஆட்டம் திருப்பூர் பகுதியில் பொதுமக்களிடம் ஆர்வத்தை ஏற்படுத்தி உள்ளது. அந்த வகையில் திருப்பூர் மாவட்டம் போயம்பாளையம் பகுதியில் பவளக்கொடி கும்மி குழுவின் 66 வது அரங்கேற்ற விழா நடைபெற்றது. இதில் கும்மி ஆசிரியர் விஸ்வநாதன் தலைமையில் 300 பெண்கள் பல்வேறு கும்மி பாடல்களுக்கு கும்மி ஆட்டம் ஆடி அசத்தினார்கள். 3 மணி நேரம் நடைபெற்ற இந்த கும்மி ஆட்ட நிகழ்ச்சியில் 35 வகையான ஆட்ட நுணுக்கங்களில் பெண்கள் கும்மி ஆடினார்கள். மிக நேர்த்தியாக நடைபெற்ற இந்த கும்மி ஆட்ட நிகழ்ச்சியை பொதுமக்கள் திரண்டு ரசித்தனர். திருப்பூரில் கும்மி ஆட்டம் புத்துணர்வுடன் வளர்ந்து வருவதாகவும், பாரம்பரிய கும்மி ஆட்டத்தை பெண்கள், ஆண்கள் என அனைத்து தரப்பினரும் ஆர்வமுடன் பங்கேற்று ஆடுவதாக கும்மி ஆசிரியர் விஸ்வநாதன் தெரிவித்தார்.

இந்த கும்மி ஆட்டம் ஆடுவதன் மூலம் மனமும் உடலும் புத்துணர்வு பெறுவதாகவும் பெண்கள் ஏராளமாக கலந்து கொண்டு கும்மி ஆட ஆர்வம் காட்டுவதாக இளம் பெண்கள் பாரம்பரிய கும்மி ஆட்டத்தை மீட்டெடுத்து வருவதாகவும் ஷர்மி ஶ்ரீ என்ற பெண் தெரிவித்தார்.

Previous Post Next Post