எடப்பாடி பழனிசாமியை வெற்றி பெறச்செய்ய அயராது உழைக்க வேண்டும்... முன்னாள் அமைச்சர்கள் பொள்ளாச்சி ஜெயராமன், கிணத்துக்கடவு தாமோதரன் பேச்சு

திருப்பூர் வடக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட   பகுதி,ஒன்றிய,  பகுதிகளில் உள்ள வார்டு  மற்றும் கிளை பகுதிகளில் நடைபெற்று வரும்  பூத் கமிட்டி, இளைஞர்-இளம்பெண்கள் பாசறை, மகளிர் குழு அமைப்பது உள்ளிட்ட பணிகள் சம்பந்தமான செயல்வீரர்கள் கூட்டம் மாவட்டக் கழக அவைத் தலைவரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான  வெ.பழனிச்சாமி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் அதிமுக தேர்தல் பிரிவு செயலாளரும்,,திருப்பூர் மாநகர் மாவட்டக் கழகச் செயலாளரும் முன்னாள் துணை சபாநாயகருமான பொள்ளாச்சி.வி..ஜெயராமன்  சிறப்புரையாற்றினார். 

மேலிட பார்வையாளர்  முன்னாள் அமைச்சர், கழக அமைப்புச் செயலாளர் கிணத்துக்கடவு சட்டமன்ற உறுப்பினர்  செ.தாமோதரன் அவர்கள் பூத் கமிட்டி, மகளிர் குழு, இளைஞர் பாசறை ஆகியவைகளை அமைக்கும் பணிகளை ஆய்வு செய்து உரையாற்றினார்.

இந்த கூட்டத்தில் முன்னாள் துணை சபாநாயகிகளும் பொள்ளாச்சி சட்டமன்ற உறுப்பினருமான பொள்ளாச்சி.வி. ஜெயராமன் பேசுகையில்,
கழகத்திற்கான உறுப்பினர் சேர்க்கின்ற பணியை சிறப்பான முறையில் செய்து வருகிறீர்கள், அதற்கு என் நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். இது எடப்பாடியார் வைக்கும் தேர்வு. அனைவரும் இதில் தேர்ச்சி பெற வேண்டும், திருப்பூர் மாநகர மாவட்டத்தில் உள்ள 379 பூத்துகளிலும் ஒவ்வொரு பூத்திற்கும் 69 உறுப்பினர்களை சேர்த்து இருக்க வேண்டும், கட்சியின் மீது பற்று உள்ளவர்களை கட்டாயம் நீங்கள் சேர்த்து இருக்க வேண்டும், இதை நீங்கள் சரியாக செய்து விட்டால் எடப்பாடியார் தேர்வில் தேர்ச்சி பெற்று விடுவீர்கள், சாதாரண கிளைச் செயலாளராக பொறுப்பேற்று, அனைத்து பகுதிகளுக்கும் சென்று பல கட்ட போராட்டத்திற்கு பிறகு தற்போது அதிமுக பொதுச்செயலாளராக உயர்ந்துள்ளார், பூத் கமிட்டியின் சரியாக பணி செய்யாதவர்களுக்கு திமுகவில் ஏற்படும் பவர் கட் போல் இங்கேயும் பவர் கட் ஆகி விடுவீர்கள், 

ஆதார் கார்டை பார்த்துவிட்டு நீங்கள் உறுப்பினர்களை சேர்க்க வேண்டும், அதேபோன்று வாக்காளர் சேர்க்கும் பணியையும் சிறப்பாக செய்திட வேண்டும், இந்தியாவில் ஒவ்வொரு ஊருக்கும் ஒவ்வொரு சிறப்பு உண்டு ஆனால் திருப்பூர் மாநகராட்சி ஊழலுக்கு பெயர் பெற்றுள்ளது, மறைந்த முதல்வர் டாக்டர் ஜெ ஜெயலலிதா மற்றும் முன்னாள் முதல்வர் எடப்பாடியார் ஆட்சி காலத்தில் எத்தனையோ நன்மைகள் திருப்பூர் மாநகராட்சிக்கு செய்து கொடுக்கப்பட்டது, அதே போன்று எடப்பாடியார் ஆட்சியில் நான்காவது குடிநீர் திட்டம் அவிநாசி அத்திக்கடவு திட்டம் ஆகிய திட்டங்கள் நிறைவடைந்தும் தற்போது வரை பொது மக்களுக்கு பயன்பாட்டிற்கு வராமல் உள்ளது, நூறாண்டு கால கனவு அவிநாசி அத்திக்கடவு திட்டத்தை செயல்படுத்தாமல் காலம் தாழ்த்தியது ஸ்டாலினின் ஆட்சி, அதேபோன்று பெருமாநல்லூர் சாலையில் பாலம் அமைப்பதற்கு முடிவு செய்யப்பட்ட நிதி ஒதுக்கியது அதையும் இந்த விடியா தி.மு.க அரசு கிடைப்பில் போட்டுள்ளது, திருப்பூர் மாநகராட்சி தற்போது ஊழலற்ற மாநகராட்சியாக மாறி உள்ளது, அதேபோன்று சட்டம் ஒழுங்கு பெரும் கேள்விக்குறியாகி உள்ளது எங்கு பார்த்தாலும் கொலை கொள்ளை குற்றச் சம்பவங்கள் நடைபெற்று வருகிறது, குற்றவாளிகளையும் கண்டுபிடிக்காமல் செயல் இழந்துள்ளது காவல்துறை, இன்றைக்கு மக்களால் எளிய முறையில் அணியக்கூடிய மக்களுக்கான ஒரே தலைவர் அண்ணன் எடப்பாடி.கே‌.பழனிச்சாமி அவர்கள் எனவே நாம் அனைவரும் ஒன்றிணைந்து அவரை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று பேசினார்.

   முன்னாள் அமைச்சரும் கிணத்துக்கடவு சட்டமன்ற உறுப்பினருமான தாமோதரன் பேசுகையில்,
பாஜகவிடமிருந்து விட்டோம் என்பதில் உறுதியாக இருக்க வேண்டும் பொதுச் செயலாளர் புரட்சித் தமிழர் எடப்பாடி.கே.பழனிச்சாமி அவர்கள் உறுதிப்படுத்தி உள்ளார், எனவே நீங்கள் அனைவரும் சிறுபான்மையினரிடம் தெளிவாக இது குறித்து எடுத்துக் கூற வேண்டும், திமுகவினர் ஏதோ ஒன்று கூறி மக்களை குழப்பி வருகிறார்கள் எனவே நீங்கள் தெளிவாக மக்களிடம் எடுத்துக் கூற வேண்டும், நாம் தேர்தலை தனியாகத்தான் சந்திக்கிறோம், நாம் மாபெரும் வெற்றியை ஏற்படுத்தி தர வேண்டும், இன்றைய காலகட்டத்தில் என்பது பூத்கமிட்டி மிகவும் அவசியமான ஒன்றாகும், கடந்த தேர்தலில் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தான் நாம் வெற்றியை பறிகொடுத்தோம் கூடுதலாக உழைத்தால் நிச்சயம் நாம் வெற்றி பெறவும் அதற்கு இந்த பூத் கமிட்டி மிகவும் அவசியமான ஒன்றாகும், முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் அவர்கள் பொறுப்பாளரின் நியமித்து அவர்களுக்கு பல்வேறு பணிகளை கொடுத்துள்ளார் அதை பொறுப்பாளர்கள் அனைவரும் சிறந்த முறையில் செயல்படுத்த வேண்டும், நேரடியாக சென்று உறுப்பினர்களை சேர்த்து விட வேண்டும், அதேபோன்று இளைஞர் இளம் பெண்கள் பாசறை மகளிர் குழு ஆகியவற்றின் 5 உறுப்பினர்கள் சேர்த்திட வேண்டும், அனைவரும் சிறந்த முறையில் பணியாற்றிட வேண்டும், எந்தப் பகுதி இருக்கிறார்களோ அந்த பகுதியில் தான் அந்த பூத் ஏஜென்ட் இருக்க வேண்டும், அவர்களைத் தான் அந்தப் பகுதி குறித்து முழு விபரம் தெரியும், இது போன்ற செயல்பட்டால் நிச்சயம் வெற்றி உறுதியாகும் தமிழகத்தில் 40 தொகுதியிலிருந்து அதிமுக வெற்றி பெறும் அதில் குறிப்பாக திருப்பூர் அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெற நாம் செய்ய வேண்டும், திருப்பூர் வடக்கு தொகுதி 40,000 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றதோடு திருப்பூர் மாநகராட்சி மட்டும்தான் 19 உறுப்பினர்களை கொண்டு மாமன்றத்தில் அமர்ந்துள்ளது, இந்த வெற்றி என்பது உங்களுடைய உழைப்பு மட்டும்தான் அது மிகவும் பாராட்டத்தக்கது, நாங்கள் அனைவரும் ஒவ்வொரு பகுதிக்காக சென்று ஆய்வு மேற்கொள்வது போல் ஒரு தொகுதிக்கு ஒரு வார்டை திடீரென தேர்வு செய்து அதிமுக பொதுச்செயலாளர் நேரில் வந்து ஆய்வு மேற்கொள்வார். திருப்பூர் மாநகர மாவட்டத்தில் உள்ள 379 பூத்துகளிலும் உடனடியாக அனைத்து பணிகளையும் விரைந்து முடிக்க வேண்டும் அதன் முடிந்த பிறகு ஆய்வுகள் மேற்கொள்ளப்படும், பூ எனவே பூத் கமிட்டியை சிறப்பாக அமைந்திட வேண்டும், மேலும் 10 பூத்துக்கு நான்கு கண்காணிப்பாளர்களும் அமைக்கப்பட உள்ளது, தமிழகத்திலேயே சிறந்த முறையில் பூத் கமிட்டி அமைந்த இடம் திருப்பூர் என்ற பெருமையை நீங்கள் பெற்றுக் கொடுக்க வேண்டும் என்று முன்னாள் அமைச்சரும், கிணத்துக்கடவு சட்டமன்ற உறுப்பினருமான தாமோதரன்  தெரிவித்தார்.  
கூட்டத்துக்கு திருப்பூர் வடக்கு சட்டமன்ற உறுப்பினரும், திருப்பூர் ஒன்றிய செயலாளருமான கே.என்.விஜயகுமார், முன்னிலை வகித்தார்.
 இந்நிகழ்வில், திருப்பூர் தெற்கு முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும்,மாவட்ட எம் ஜி ஆர் இளைஞர் அணி செயலாளருமான  சு.குணசேகரன்,மாவட்ட கழக துணைச்செயலாளர்   பூலுவபட்டி பாலு, கழக பொதுக்குழு உறுப்பினரும், ஒன்றிய குழு தலைவருமான  சொர்ணாம்பாள் பழனிச்சாமி நெருப்பெரிச்சல் பகுதி கழக செயலாளர்  பட்டு லிங்கம், காந்திநகர் பகுதி கழக செயலாளர்  கருணாகரன்,கொங்கு நகர் பகுதி கழக செயலாளர் பி.கே.எம்.முத்து, கோல்டன் நகர் பகுதி கழக செயலாளர்  ஹரிஹரசுதன்,வேலம்பாளையம் பகுதி கழக செயலாளர் சுப்பிரமணியம்,  தொட்டிபாளையம் பகுதி கழக செயலாளர்  வேலுமணி, அங்கேரிபாளையம் பகுதி கழக செயலாளர்  பாலசுப்பிரமணியம்
 மாவட்ட மகளிரணி செயலாளர்  சுந்தராம்பாள், மாவட்ட விவசாய அணி செயலாளர் கலைமகள்  கோபால்சாமி, மாவட்ட மாணவரணி செயலாளர்  சதிஷ்,   மாவட்ட கலைப் பிரிவு செயலாளர்   ரத்தினகுமார்,  ஒன்றிய அவைத்தலைவரும், ஒன்றிய குழு உறுப்பினருமான  ஜஸ்வர்யா மகாராஜ், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்  வேல்குமார் சாமிநாதன் உள்பட பலர் பங்கேற்றனர். 
Previous Post Next Post