“10 நிமிட இஸ்லாமிய தொழுகையால் ஒலி மாசு ஏற்படுகிறது என்று கூறினால், கோயில்களில் ஒலிபரப்பப்படும் பாடல்கள் மற்றும் பஜனைகளை என்னவென்று சொல்லுவீர்கள்?” - குஜராத் உயர்நீதிமன்றம் அதிரடி கேள்வி


 “10 நிமிட இஸ்லாமிய தொழுகையால் ஒலி மாசு ஏற்படுகிறது என்று கூறினால், கோயில்களில் ஒலிபரப்பப்படும் பாடல்கள் மற்றும் பஜனைகளை என்னவென்று சொல்லுவீர்கள்?” - குஜராத் உயர்நீதிமன்றம் அதிரடி கேள்வி

பள்ளிவாசல்களில் தொழுகையை ஒலிபரப்புவதற்கு தடை கோரிய மனுவை தள்ளுபடி செய்தது குஜராத் உயர்நீதிமன்றம் உத்தரவு.

மசூதிகளில் ஒலிபெருக்கி மூலம் தொழுகைக்கான இஸ்லாமிய அழைப்பை ஒளிபரப்புவதற்கு தடை விதிக்கக் கோரிய பொதுநல வழக்கை (பிஐஎல்) குஜராத் உயர்நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தள்ளுபடி செய்தது.

தலைமை நீதிபதி சுனிதா அகர்வால் மற்றும் நீதிபதி அனிருத்தா பி.மேயி ஆகியோர் அடங்கிய பெஞ்ச் இந்த மனுவை "முற்றிலும் தவறான கருத்து" என்று குறிப்பிட்டது.

பஜ்ரங் தள் தலைவர் சக்திசிங் ஜலாவின் குஜராத் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொது நல மனுவில், "பள்ளி வாசல்களில் தொழுகைக்கு அழைக்கும்  ஒலிபெருக்கிகள் மூலம் "ஒலி மாசுபாடு" ஏற்படுகிறது, இது பொது மக்களின், குறிப்பாக குழந்தைகளின் ஆரோக்கியத்தை மோசமாக பாதிக்கிறது மேலும் பல சிரமங்களை ஏற்படுத்துகிறது இவற்றுக்கு தடை விதிக்க வேண்டும்" என கோரியிருந்தார்.

மனுவை விசாரித்த குஜராத் உயர்நீதிமன்றம் "மனுதாரரின் கூற்றுகளில் அனுபவ ஆதாரங்கள் மற்றும் அறிவியல் அடிப்படை இல்லை என்று நீதிமன்றம் கவனித்தது. பெஞ்ச் தனது தீர்ப்பில், பொதுவாக அதிகபட்சம் 10 நிமிடங்கள் நீடிக்கும் அஸான், குறிப்பிடத்தக்க ஒலி மாசு அபாயத்தை உருவாக்கும் டெசிபல் அளவை எட்ட வாய்ப்பில்லை என்று மனுவை தள்ளுபடி செய்தது..

"கோவில் சடங்குகளின் போது மணி மற்றும் கோஷ்டி சத்தம் குறித்து மனுதாரர் தரப்பு வழக்கறிஞரிடம் நீதிமன்றம் மேலும் கேள்வி எழுப்பியது.

"உங்கள் கோவிலில், மேளம் மற்றும் இசையுடன் கூடிய காலை ஆரத்தியும் அதிகாலை 3 மணிக்கு தொடங்குகிறது. அது சத்தத்தை ஏற்படுத்தவில்லையா? கண்டா (மணி), காடியால் (கோங்) சத்தம் கோவில் வளாகத்திற்குள் மட்டுமே உள்ளது என்று நீங்கள் கூற முடியுமா? வெளியே சத்தம் வராதா " என பெஞ்ச் கேட்டது.

ஒலி மாசுபாட்டை அளவிடுவதற்கான அறிவியல் முறைகள் இருப்பதை எடுத்துக்காட்டி, 10 நிமிட ஆஜான் ஒலி மாசுபாட்டை ஏற்படுத்தக்கூடும் என்ற கூற்றை உறுதிப்படுத்துவதற்கு உறுதியான தரவு அல்லது ஆய்வுகளை PIL வழங்க வேண்டும் என்று அது குறிப்பிட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

Previous Post Next Post