கோவை மாவட்டம் சர்க்கார் சாமகுளம் ஒன்றியம் வெள்ளானைப்பட்டி ஊராட்சி தலைவர் மற்றும் துணைத் தலைவர் காசோலை அதிகாரம் ரத்து சிறப்பு அதிகாரி நியமனம் மாவட்ட ஆட்சியர் அதிரடி நடவடிக்கை

கோவை மாவட்டம்  சர்க்கார் சாமகுளம் ஒன்றியம் வெள்ளானைப்பட்டி ஊராட்சி தலைவர் மற்றும் துணைத் தலைவர் காசோலை அதிகாரம் ரத்து சிறப்பு அதிகாரி நியமனம் மாவட்ட ஆட்சியர் அதிரடி நடவடிக்கை

 கோவை மாவட்டம் சர்க்கார்சாமக்குளம் ஒன்றியம் வெள்ளானைப்பட்டி ஊராட்சி தலைவராக இருப்பவர் கவிதா துணைத்தலைவராக இருப்பவர் வி.ராஜன் இந்த ஊராட்சியில் 9 உறுப்பினர்கள் உள்ளனர் இதில் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த கவிதா தலைவராக இருப்பதால் அவருக்கும் துணைத் தலைவருக்கும் கருத்து வேற்றுமை காரணமாக ஊராட்சியில் அடிப்படை வசதிகள் பொது சுகாதாரம் தார் சாலை வசதி 100 நாள் வேலை வாய்ப்பு திட்டம் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சி பணிகளில் கவனம் செலுத்தாமல் இருவரும் தனித்தனி கோஷ்டிகளாக செயல்பட்டு வந்தனர் இதில் துணைத் தலைவர் தன்னிச்சையாக செயல்பட்டு விதிகளை மீறி குடிநீர் குழாய் இணைப்பு கொடுத்தல் தனக்கு சாதகமாக உள்ள வார்டு உறுப்பினர்களுக்கு மட்டும் பணிகளை மேற்கொள் செய்வது தலைவரின் ஆலோசனை கேட்காமல் தன்னிச்சையாக ஊராட்சியை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்ததாக கூறப்படுகிறது இதனால் ஊராட்சி பணிகளில் முழுமையாக செயல்பட முடியாமல் துணைத் தலைவர் தடுத்து வருகிறார் என்று ஊராட்சி தலைவர் கவிதா மாவட்ட ஆட்சியரிடம் ஆதாரங்களுடன் புகார் அளித்து வந்தார் மேலும் அவர் அளித்த புகாரில் வெள்ளானைப்பட்டி ஊராட்சியில் கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்புகள் தொழிற்சாலைகளுக்கு விதிகளை மீறி அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படும் வகையில் கட்டிட அனுமதி வழங்கி வந்தார் இதனை தட்டிக் கேட்ட பொழுது மிரட்டல் விடுத்து வந்தார் இதனால் ஊராட்சி மன்ற கூட்டமும் கிராம சபை கூட்டமும் நடத்தவிடாமல் தடுத்து வந்தனர் என்று அந்த புகாரியில் குறிப்பிடப்பட்டுள்ளது அதே போல் ஊராட்சி துணைத் தலைவரும் தலைவர் மீது புகார் அளித்திருந்தார் இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் விசாரணை மேற்கொண்டு அறிக்கை அளிக்குமாறு உதவி இயக்குனர் (ஊராட்சி)அவர்களுக்கு உத்தரவிட்டார் அதன் அடிப்படையில் விசாரணை அதிகாரி நியமனம் செய்யப்பட்டு வெள்ளனப்பட்டி ஊராட்சி ஆய்வு செய்த பொழுது கடந்த இரண்டு ஆண்டுகளாக அரசு ஒதுக்கிய நிதியில் பல்வேறு முறைகேடுகள் மற்றும் வளர்ச்சிப் பணிகளில் விதிமீறல் அடிப்படை வசதிகள் செய்யாதது உள்ளிட்ட பல்வேறு புகார்கள் உறுதி செய்யப்பட்டது இது தொடர்பான அறிக்கை மாவட்ட ஆட்சியருக்கு அளிக்கப்பட்டது அதன் அடிப்படையில் வெள்ளாளப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் கவிதா மற்றும் துணைத் தலைவர் பி ராஜன் ஆகியோரை காசோலையில் கையெழுத்திடும் அதிகாரத்தை ரத்து செய்தும் வார்டு உறுப்பினர் கூட்டம் நடத்தவும் தலைவிதித்தார் மேலும் ஊராட்சியில் வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள சிறப்பு அதிகாரி நியமனம் செய்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார் 
Previous Post Next Post