நீதிமன்றத்தை அணுகி ஆர்.எஸ்.எஸ் ஊர்வலங்களுக்கு தடை பெற வேண்டும்...மனித நேய மக்கள் கட்சி முடிவு

 வரும் காலங்களில் நீதிமன்றத்தை அணுகி ஆர்.எஸ்.எஸ் ஊர்வலங்களுக்கு தடை பெற வேண்டும்  என்ற கோரிக்கையை  மனித நேய மக்கள் கட்சி சார்பில் வைக்கப்படுவதாக தாம்பரத்தில் செயற்குழு கூட்டத்தில் கலந்து கொண்ட மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் அப்துல் சமது பேட்டி

சென்னை கிழக்கு தாம்பரம் அடுத்த செம்பாக்கத்தில் வரும் 6 ஆம் தேதி பாபர் மசூதி இடிப்பு தினத்தை பயங்கரவாத எதிர்ப்பு நாளாக கருதி வழிபாட்டு தலங்களை பாதுகாக்க கோரி  தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் தலைமையில் மக்கள் திறள் ஆர்பாட்டம் நடைபெற உள்ளதால் அதற்கான மாவட்ட  செயற்குழு கூட்டம் தாம்பரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் மாவட்ட தலைவர் ஜாஹிர் உசேன் தலைமையில் நடைபெற்றது,

இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் அப்துல் சமது மற்றும் துணை பொது செயலாளர் யாக்குப் கலந்து கொண்டு சிறப்புறையாற்றி தீர்மானங்கள் நிறைவேற்றினர்,

பின்பு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் அப்துல் சமது  வாரனாசி மற்றும் மதுரா பகுதிகளில் உள்ள மசூதிகளுக்கு பிரச்சனை ஆக்ககூடிய வேலையில்  இந்த நாட்டில் இருக்ககூடிய சன் பரிவார் அமைப்பை சேர்ந்தவர்கள் செய்து வருகின்றனர்,

சட்டத்தில் அடிபடையான ஆட்சியை நடைமுறைபடுத்த வேண்டும் ,1991 வழிப்பாட்டு உரிமைகள் பாதுகாப்பு சட்டத்தை பாதுகாக வேண்டும் நடைமுறைபடுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி வருகின்ற டிசம்பர் ஆறாம் தேதி மாபெரும் மக்கள் திறள் ஆர்பாட்டத்தை தமிழ்னாடு முஸ்லீம் முன்னேற்ற கழகம் நடத்த உள்ளது அதில் ஜனனாயக சக்திகள் பல்வேறு அரசியல் கட்சிகள் ,சமூக அமைப்பை சேர்ந்த தலைவர்கள் கலந்து கொள்ள உள்ளனர்,

தமிழக அரசின் சட்டமசோதாக்களை கிடப்பில் போடுவதை உச்சநீதிமன்றம் கண்டித்துள்ளது, உச்சநீதிமன்றத்தின் கருத்துகளை உள்வாங்கி தமிழ்நாட்டின் ஆளுனர் ஆர்.என் ரவி அவர்கள் இனிமேலாவது சரிபட செயல்பட வேண்டும் என்று கேட்டு கொள்வதாகவும்,

முக்கியமாக சன் பரிவார் அமைப்புகால் எந்த சித்தானநந்தத்தை இந்தியாவில் நடைமுறை படுத்த வேண்டும் என்று நினைக்கிறார்களோ  அதை தமிழ்நாட்டில் நடைமுறைபடுத்துவதற்காக முழு வேகத்தோடு ஆர்.என் ரவி செயல்பட்டு கொண்டிருக்கிறார்,

கோவில் சொத்துக்கள் கொள்ளையடிக்கபட்டுள்ளதாக ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன் குற்றச்சாட்டிற்க்கு அறநிலைய துறை அமைச்சர் சேகர் பாபு மற்றும் முதலமைச்சர் தெளிவாகவே பதியளித்துள்ளனர்,

பாஜக ஒன்றிய அமைச்சர் சொல்வதை நிச்சயமாக பெரும்பான்மை இந்து சமய மக்கள் ஏற்றுகொள்ளமாட்டார்கள் தமிழ்னாட்டினுடைய அரசு என்பது அனைத்து மக்களுக்கான அரசு என்பதை மிக தெளிவாக நடைபெற்று கொண்டிரக்கிறது,

ஆர்.எஸ்.எஸ்.அமைப்பு ரகசிய திட்டமிடதலோடு செயல்படகூடிய அமைப்பு தங்களின் உறுப்பினர்களை கூட ரகசியமாக வைக்ககூடிய அமைப்பாக இருக்கிறது அந்த அமைப்பு ஒரு மதசார்பற்ற அமைதி பூங்காவான தமிழ்நாட்டில் செயல்பட அவர்கள் ஊர்வலங்கள்,பேரணிகள் நடத்த அனுமதிக்க கூடாது என்பதில் தமிழ்னாடு அரசும் உறுதியாக இருந்த நிலையில் நீதிமன்றம் உத்திரவின் பேரில் ஒரு சில இடங்களில் பேரணியை அனுமதிக்கபட்டது,

வரும் காலங்களில் நீதிமன்றத்தை அணுகி அவர்களின் ஊர்வலங்களுக்கு தடை பெற வேண்டும்  என்ற கோரிக்கை மனித நேய மக்கள் கட்சி சார்பில் வைக்கப்படுவதாக தெரிவித்தார்.

Previous Post Next Post