தூத்துக்குடி மாவட்டத்தில் 01.01.2024 மற்றும் 02.01.2024 ஆகிய இரு தினங்களுக்கு கனமழை எச்சரிக்கை.! -மரம் அறுக்கும் கருவிகள், மோட்டார் பம்புகள் மற்றும்நிவாரண முகாம்களை தயார் நிலையில் வைத்திடவும் அதிகாரிகளுக்கு ஆட்சியர் உத்தரவு.!

தூத்துக்குடி மாவட்டத்தில் 01.01.2024 மற்றும் 02.01.2024 ஆகிய இரு தினங்களுக்கு கனமழை எச்சரிக்கை.! -மரம் அறுக்கும் கருவிகள், மோட்டார் பம்புகள் மற்றும்நிவாரண முகாம்களை தயார் நிலையில் வைத்திடவும் அதிகாரிகளுக்கு ஆட்சியர் உத்தரவு.!

இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையின்படி மாவட்டத்தில் 01.01.2024 மற்றும் 02.01.2024 ஆகிய இரு தினங்களில் தூத்துக்குடி மாவட்டத்தில் கனமழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் கோ.லட்சுமிபதி தெரிவித்துள்ளார்.

இது குறித்து ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்:- 

இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையின்படி தூத்துக்குடி மாவட்டத்தில் 01.01.2024 மற்றும் 02.01.2024 ஆகிய இரு தினங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 17.12.2023 மற்றும் 18.12.2023 தேதிகளில் பெய்த அதீத கனமழை காரணமாக தாமிரபரணி ஆறு மற்றும் நீர்நிலைகளில் அதிக நீர் உள்ளதால் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொது மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி எச்சரிக்கப்படுகிறார்கள். பொதுமக்கள் நீர்நிலைகளுக்கு செல்ல வேண்டாம் என்றும் கால்நடைகள் நீர்நிலைகளில் இறங்காதவாறு பார்த்துக்கொள்ளவும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

மாவட்டத்தில் பாதிப்புக்குள்ளாகும் பகுதிகளை தொடந்து கண்காணித்து மணல் மூடைகள் மரம் அறுக்கும் கருவிகள் மற்றும் மோட்டார் பம்புகள் முதலிய பொருட்களை தயார் நிலையில் வைத்திடவும் நிவாரண முகாம்களை தயார் நிலையில் வைத்திடவும் தக்க முன்னேற்பாடுகள் செய்யவும் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து துறை அலுவலர்களும் அறிவுறுத்தப்படுகிறார்கள் என மாவட்ட ஆட்சித்தலைவர் கோ.லட்சுமிபதி தெரிவித்துள்ளார்.
 

Previous Post Next Post