முதலமைச்சர் உத்தரவின்படி, அதிகனமழையால் பாதிக்கப்பட்டவர்கள் யாரும் விடுபடாத வகையில் கணக்கெடுப்பு பணிகள் நடைபெற்று வருகிறது " -மாண்புமிகு பால்வளத்துறை அமைச்சர் மனோதங்கராஜ்

"முதலமைச்சர் உத்தரவின்படி, அதிகனமழையால் பாதிக்கப்பட்டவர்கள் யாரும் விடுபடாத வகையில் கணக்கெடுப்பு பணிகள் நடைபெற்று வருகிறது " -மாண்புமிகு பால்வளத்துறை அமைச்சர் மனோதங்கராஜ் 

தூத்துக்குடி மாவட்டம் திருசெந்தூர் வட்டம் புன்னக்காயல் நியாய விலைக்கடையில் தமிழ்நாடு முதலமைச்சரால் அறிவிக்கப்பட்ட 5 கிலோ அரிசி மற்றும் ரூ.6,000/- நிவாரணத்தொகையை பொதுமக்களுக்கு பால்வளத்துறை அமைச்சர் த.மனோதங்கராஜ் இன்று (31.12.2023) வழங்கினார்

புன்னக்காயல் பகுதியை சேர்ந்த சகோதரர்கள் 13 பேர் கழிமுகப்பகுதியில் தங்கள் உயிரை துச்சமாக கருதி மணல்மேட்டை அகற்றியதால் அதிகனமழையினால் பெரிய பாதிப்பு தவிர்க்கப்பட்டது. அவர்களை அரசு பாராட்டுவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளோம். அதிகனமழையால் புன்னக்காயல் பகுதியில் படகு, மீன்பிடி வலை, தூண்டில் வளைவு, சாலைகள் சேதமடைந்துள்ளன. ஆத்தூர் பகுதியில் தாமிரபரணி ஆற்றில் 7 இடங்களில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இவற்றை தற்காலிகமாக சீரமைக்கும் பணி விரைவாக நடைபெற்று வருகிறது. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி, அதிகனமழையால் பாதிக்கப்பட்டவர்கள் யாரும் விடுபடாத வகையில் கணக்கெடுப்பு பணிகள் நடைபெற்று வருகிறது என பால்வளத்துறை அமைச்சர் த.மனோதங்கராஜ் தெரிவித்தார்.

அதனைத்தொடர்ந்து புன்னக்காயல் பகுதியில் அதிகனமழையினால் பாதிக்கப்பட்ட இடங்களில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து ஊர்மக்களிடம் ஆலோசனைக்கூட்டம் நடத்தினார். பின்னர் திருச்செந்தூர் வட்டம் ஆத்தூர் மற்றும் புன்னக்காயல் ஊராட்சியில் உள்ள நியாயவிலை கடைகளில் பொதுமக்களுக்கு 5 கிலோ அரிசி மற்றும் ரூ.6,000/ நிவாரணத்தொகையை வழங்கினார். அதனைத்தொடர்ந்து குளம் உடைப்பால் வெள்ளம் சூழ்ந்த பரமன்குறிச்சி பகுதியில் இருந்து நீரை வெளியேற்றும் பணிகளை பார்வையிட்டார். பின்னர் சடையநேரி குளம் உடைப்பால் வெள்ளம் சூழ்ந்த வெள்ளாளன்விளை, வட்டன்விளை பகுதியில் இருந்து நீரை வெளியேற்றும் பணிகளை பார்வையிட்டார். அதனைத்தொடர்ந்து சடையநேரி குளம் உடைப்பால் வெள்ளம் சூழ்ந்த மெய்ஞ்ஞானபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை பார்வையிட்டு வெள்ளநீரை அகற்றுவது குறித்து அலுவலர்களுடன் ஆலோசனை செய்தார்.

இந்த ஆய்வின்போது, துறை சார்ந்த அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.

 

Previous Post Next Post