தஞ்சையில் நடைபெற்ற மாநில அளவிலான சிலம்பம் போட்டியில் கோவை மாவட்ட வீரர் வீராங்கனைகள் தங்கம் வெள்ளி வெண்கலம் பதக்கங்கள் வென்று சாதனை..

தஞ்சையில் நடைபெற்ற மாநில அளவிலான சிலம்பம் போட்டியில் கோவை மாவட்ட வீரர்,வீராங்கனைகள் தங்கம்,வெள்ளி,வெண்கலம் பதக்கங்கள் வென்று சாதனை.. கோவை திரும்பிய வீரர்,வீராங்கனைகளுக்கு கோவை மாவட்ட சிலம்பம் கமிட்டி சார்பாக பாராட்டு விழா..
தமிழ்நாடு சிலம்பம் கமிட்டி சார்பாக 5 வது மாநில அளவிலான சிலம்பம் சாம்பியன்ஷிப் போட்டி அண்மையில் தஞ்சையில் நடைபெற்றது.இதில்,கயகோவை,,மதுரை,திருச்சி,தஞ்சை என  தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 1200 க்கும் மேற்பட்ட வீரர்,வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.மாநில அளவில் நடைபெற்ற இதில் கோவையில் இருந்து 5 வயது முதல் 21 வயது வரையிலான ,52 மாணவ,மாணவிகள் போட்டிகளில் பங்கு பெற்றனர்... சப்-ஜூனியர், ஜூனியர், யூத் மற்றும் சீனியர் ஆகிய நான்கு பிரிவுகளில் ஆண்கள், பெண்கள் என தனித்தனியாக போட்டிகள் நடைபெற்றன… தொடுமுறை,ஒற்றை மற்றும் இரட்டை கம்பு என அனைத்து பிரிவிகளிலும்  கோவையில் இருந்து  சென்ற  52 மாணவ,மாணவிகளும் வெற்றி பெற்று சாதனை புரிந்துள்ளனர்.. தங்கம்,வெள்ளி,வெண்கலம் என பதக்கங்களை குவித்து  கோவை திரும்பிய  மாணவ,மாணவிகளுக்கு உற்சாக வரவேற்பு வழங்கப்பட்டது.தொடர்ந்து கோவை மாவட்ட சிலம்பம் கமிட்டியின் தலைவர் தியாகு நாகராஜ் தலைமையில் நடைபெற்ற பாராட்டு விழாவில் மாணவ,மாணவிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கி கவுரிவிக்கப்பட்டது..இந்நிகழ்ச்சியில் மாவட்ட சிலம்பம் கமிட்டி நிர்வாகிகள் சிவமுருகன்,அரவிந்த் மற்றும் பயிற்சியாளர்கள் விது சங்கர்,பரத் கிருஷ்ணா,மதன்,பிரசாந்த் உட்பட மாணவ,மாணவிகள் அவர்களது பெற்றோர்கள் என பலர் கலந்து கொண்டனர்..
Previous Post Next Post