திருப்பூர் மாநகராட்சி பட்ஜெட் கூட்டத்தில் அதிமுக கவுன்சிலர்கள் வெளிநடப்பு.

 திருப்பூர் மாநகராட்சி பட்ஜெட் கூட்டத்தில் பேச அனுமதிக்காததால் அதிமுக கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்.

திருப்பூர் மாநகராட்சி பட்ஜெட் கூட்டம் இன்று மேயர் தினேஷ்குமார் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 1575 கோடி ரூபாய்க்கு பட்ஜெட் தாக்கப்பட்டுள்ள நிலையில் 821 லட்சம் உபரி பட்ஜெட் என்று தெரிவிக்கப்பட்டு
உள்ளது.  பட்ஜெட் உரையை மேயர் தினேஷ்குமார் வாசித்து முடித்த பிறகு, பிரதான  எதிர்க்கட்சியான அதிமுக கவுன்சிலர்கள் பேசுவதற்கு வாய்ப்பு கேட்டார்கள். அவர்களுக்கு வாய்ப்பளிக்காமல் திமுகவின் கூட்டணி கட்சி கவுன்சர்களுக்கு வாய்ப்பளித்ததாக கூறி எதிர்க்கட்சி குழு தலைவர் அண்பகம் திருப்பதி தலைமையில் அதிமுக கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்.
அதிமுக கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்.

இதை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக எதிர்க்கட்சித் தலைவர் அன்பகம் திருப்பதி, ' மாநகராட்சி பொதுமக்களுக்கு 100% வரி உயர்வு செய்துள்ளதாகவும்,  பொதுமக்கள் பாதிக்கப்பட்டு இருக்கும் நிலையில் அது குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பதுடன், இது குறித்து மாமன்றத்தில் பேசுவதற்கு எதிர்க்கட்சிக்கு அனுமதி தரவில்லை என்றும் குற்றம் சாட்டினார். மேலும் குப்பை வரியையும் அதிகப்படுத்தி இருப்பதாகவும் குறைக்கவும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார். திருப்பூர் மாநகராட்சியில் இரண்டு மடங்காக வரியை உயர்த்திவிட்டு உபரி பட்ஜெட் என்று கூறிக் கொள்வது நியாயமான செயல் அல்ல என்று தெரிவித்தவர் வரிவசூலிப்பதற்காக பொதுமக்கள் மீது ஜப்தி நடவடிக்கையும் அராஜகத்தையும் ஏவி விடுவதாக மாநகராட்சி குற்றம் சாட்டினார். மேலும் மாநகராட்சியில் எதிர்க்கட்சியான அதிமுக கவுன்சிலர்களுக்கு கடைசி இறுதி ஒதுக்கி புறக்கணிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

Previous Post Next Post