தமிழக வாள் வீச்சு சங்கத்தின் மீது அவதூறு பரப்பி வரும் தமிழக விளையாட்டு மேம்பாட்டு துறை அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க கோவை மாவட்ட வாள் வீச்சு சங்கத்தினர் கோரிக்கை

தமிழக வாள் வீச்சு சங்கத்தின் மீது தவறான தகவல்களை கூறி அவதூறு பரப்பி வரும் தமிழக விளையாட்டு மேம்பாட்டு துறை அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க கோரி கோவை மாவட்ட வாள் வீச்சு சங்கத்தினர் கோரிக்கை..


வாள் வீச்சு போட்டியில் கலந்து கொண்ட  கன்னியாகுமரியை சேர்ந்த மாணவி வாள் வீச்சு வீராங்கனையான ஜெப்ரிலின் தமிழக விளையாட்டு மேம்பாட்டு துறையை சேர்ந்த ஜிஜோ நிதி ஆகியோர் தமிழக வாள் வீச்சு சங்கத்தின் மீது அவதூறு பரப்பி வருவதாக  கோவை மாவட்ட வாள் வீச்சு சங்கத்தின் நிர்வாகி  தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், அண்மையில் நடைபெற்ற ஆசிய விளையாட்டு வாள் வீச்சு  போட்டியில் கலந்து கொண்ட   கன்னியாகுமரியை சேர்ந்த மாணவி ஜெப்ரிலின் வாள் வீச்சு போட்டியில் தமிழத்திற்கு  பெருமை சேர்த்துள்ளதாக தெரிவித்தார்.அதே நேரத்தில் தமிழ்நாடு வாள் வீச்சு சங்கத்திற்கும் அதன் நிர்வாகிகளுக்கும்  அவப்பெயரை ஏற்படுத்தும் வகையில் பொய்யான குற்றச்சாட்டுகளை தமிழக விளையாட்டு மேம்பாட்டு துறையை சேர்ந்த ஜிஜோ நிதியுடன் சேர்ந்து பரப்பி வருவதாக குற்றம் சாட்டினார்.அவரது மாவட்டத்தில் அவருக்கும் பயிற்சியாளருக்கும் உள்ள சொந்த பிரச்னையை தமிழக வாள் வீச்சு சங்கத்துடன் தொடர்பு படுத்தி அவதூறு பரப்புவதாக கூறிய அவர்,,இதனால் தமிழகத்தில் வாள் வீச்சு விளையாட்டில் ஆர்வத்துடன் ஈடுபட்டு வரும் மாணவ,மாணவிகள் பாதிப்படைய நேரிடும் என வேதனை தெரிவித்தார்..எனவே,
இந்த விவகாரத்தில் தமிழக அரசும், இளைஞர் நலன்  மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் தலையிட்டு உரிய விசாரனை மேற்கொள்ள வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.மேலும் இதில் உண்மைக்கு புறம்பாக தமிழக வாள் வீச்சு சங்கத்தின் மீதும் அதன் நிர்வாகிகள் மீதும்  தவறான தகவல்களை பரப்பி வரும் ஜிஜோ நிதி மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்..
Previous Post Next Post