மத நல்லிணக்கம், சகோதரத்துவம் நிலவ,மத்தியில் ஆட்சி மாற்றம் தேவை. பல் சமயநல்லுறவு இயக்க மாநில தலைவர்முஹம்மது ரஃபிக் பேச்சு.


 ஈரோடு மாவட்டம், பல்சமயநல்லுறவஇய க்கத்தின் சார்பில்,சத்திய மங்கலத்தில் இந்தியா கூட்டணியை ஆதரித்து இறுதிக் கட்ட தீவிர தேர்தல் பிரச்சார கூட்டம், மாவ ட்ட ஒருங்கிணைப்பாளர் ஜமேஷ் தலை மையில்,மாவட்டத் தலைவர் ஆசிப், கௌ ரவத் தலைவர் ஐயா கவிமணி மற்றும் மாவட்ட செயலாளர் சக்திவேல், மாவட்ட துணை தலைவர் சேவியர் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. கூட்டத் தில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட பல் சமய நல்லுறவு இயக்கத் தின் மாநில தலைவர் முகம்மதுரஃபிக் பேசுகையில், 

இயக்கத்தின் சார்பில், தேர்தல் அறிவிப்பு வந்தவுடன், மாநில முழுவதும் திராவிட முன்னேற்றக் கழக கூட்டணி வேட்பாளர் களை ஆதரித்து, தீவிர பிரச்சாரம் செய்து வருகிறோம்.செல்லும் இடங்களில் எல் லாம்,மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் தவறான திட்டங்கள் குறித்து விளக்கி பரப்புரை மேற்க் கொள்கையில், மக்கள் மிகுந்த ஆதரவு தெரிவிக்கிறார் கள்.எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் இந்தியா கூட்டணி 40 இடங் களிலும்வெற்றி பெறும் எனவும்,பாரதிய ஜனதா கட்சியின் பொது சிவில் சட்டம் குறித்து பேசும்போது,பாரதிய ஜனதா கட்சி இதற்கு முன்னர் முத்தலாக் போன்ற பல்வேறு சட்டங்கள் கொண்டு வந்தும், தற்போது பொது சிவில் சட்டம் கொண்டு வருவதாக அறிவித்திருக்கிற நிலையில், இந்த சட்டங்களால் நாட்டு மக்கள் என்ன பயன்பெற போகிறார்கள்? 140 கோடி இந்திய மக்கள் இந்த சட்டத்தால் என்ன பயன் பெற போகிறார்கள்? என பிரதமரை தான் கேட்பதாகவும்,

பத்தாண்டு கால பாரதிய ஜனதா கட்சி ஆட்சியில்,24 வயது முதல் 34 வயது வரை உள்ள இளைஞர்களில், 84% வேலை வாய் ப்பை இழந்திருக்கிறார்கள் என்றும், இந் திய நாடு பொருளாதாரத்தில் பின் தங்கி., நாடு பொருளாதார வீழ்ச்சி அடைந்திருப்ப தாக தெரிவித்தார். மேலும் பாஜக ஆட்சி யில்,தவறான ஜிஎஸ்டி மூலம் சிறு குறு தொழில் நிறுவனங்கள் நலிவடைந்து, அதை நடத்தியவர்கள் இன்று அமைப்பு சாரா தொழிலாளர்களாக வேலை செய்து வருவதாக குறிப்பிட்டார்.பாஜக ஆட்சியில் நாடு முழுவதும் மதவாத மோதல்கள் அதி கரித்து பிரிவினை ஏற்பட்டு வருவதாக குறிப்பிட்டும்,நாட்டில் சகோதரத்துவம், மத நல்லினக்கம்,ஒற்றுமை நிலவ, இந்தியா கூட்டணிக்கு அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்றும், மத்தியில் ஆட்சி மாற் றம் நிகழ, நீலகிரி நாடாளுமன்ற தொகுதி க்கு, முன்னாள் அமைச்சர் ஆ. ராசாவிற்கு வாக்களிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

இக்கூட்டத்தில், பல் சமய நல்லுறவு இய க்க மாநிலத் துணைச் செயலாளர் அபு மற்றும் சத்தியமங்கலம் நகர தலைவர் முகமது பாரூக், கோபி நகர தலைவர் கோபி ஜின்னா, சத்தி நகரத் துணைத் தலைவர் பாலசுப்பிரமணியம், மாவட்ட துணைச் செயலாளர் பிரபு தாஸ், கோபி நகர பொருளாளர் குல்பீர் அலி மற்றும் ஈரோடு பொறுப்பாளர் நவாப் அலி உள் ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நிறை வாக இயக்கத்தின் மாவட்ட பொருளாளர் தேவ் ஆனந்த் நன்றி கூறினார்.

Previous Post Next Post