நீலகிரி எம்.பி. தொகுதிகுட்பட்ட, பவானிசாகர் (தனி) சட்டமன்ற தொகுதியில், அதிகப்படியான வாக்குப்பதிவு. மக்கள் ஆர்வமுடன் வாக்களித்ததால் வாக்குபதிவு சதவீதம் உயர்வு..


இந்திய நாட்டின் 18 வது மக்களவைக் கான முதற் கட்ட வாக்குப்பதிவு, தமிழ கம், புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதி உள்ளடக்கி,,102மக்களவைத் தொகுதி களுக்கான, வாக்கு பதிவு நேற்று காலை 7 மணிக்கு துவங்கி, மாலை 6 மணிக்கு நிறைவு பெற்றது. இதில் பவானிசாகர் (தனி) மேட்டுப்பாளை யம்,உதகமண்டலம்,  குன்னூர், கூட லூர் (தனி), மேட்டுப்பாளையம்,அவி நாசி(தனி)6 சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கிய,நீலகிரி நாடாளு மன்ற தொகுதியில், 6,87,552 ஆண் வாக்கா ளர்களும்,7,40,742 பெண் வாக்காளர் களும்,மற்றவர்கள் 93 பேரும் என மொத்தமாக 14,28,387 வாக்காளர்கள் உள்ளனர்.இதில், நேற்று நடந்த வாக் குப் பதிவில், 6 சட்டமன்ற தொகுதியி லும், 4.90,186ஆண் வாக்காளர்களும், 5,08,113பெண்வாக்காளர்களும்,மற்றவர்கள் 35 பேரும் என மொத்தமாக, 9,98,334 வாக்காளர்கள் வாக்களித்த தில்,நீலகிரி நாடாளுமன்ற தொகுதி யின் மொத்த வாக்குப்பதிவு சதவீதம் 69.89 சதவீத மானது. .

நீலகிரி நாடாளுமன்ற தொகுதிக்குட் பட்ட,ஆறு சட்டமன்ற தொகுதிகளில், அதிகப்படியான வாக்காளர் களை கொண்ட 3-வது பெரிய சட்டமன்ற தொகுதியான, பவானிசாகர் (தனி) சட்டமன்ற தொகுதியில், 1,26,180 ஆண் வாக்காளர்களும், 1, 34.183 பெண் வாக்காளர்களும், மற்றவர்கள் 21 பேர் என மொத்தம் 2.60,384 வாக் காளர்கள் உள்ளனர். இதில் நேற்று நடந்து முடிந்த தேர்தலில், 97,521 ஆண் வாக்காளர்களும்,1,00,577 பெண் வாக் காளர்களும், மற்றவர்கள் 5 பேர் என மொத்தம் 1,98,103 வாக்காளர்கள் வாக் களித்து உள்ளனர்.இது மொத்தம் 76.08% வாக்கு பதிவு ஆகும். நீலகிரி எம்.பி. தொகுதியில், வாக்குபதிவு நடைபெற்ற ,ஆறு சட்டமன்றத் தொகு தியில், பவானிசாகர் (தனி) தொகுதி வாக்குபதிவுசதவிகிதத்தில், முதலிடம் வகிக்கிறது. வாக்கு பதிவு நடந்த நேற் று, ஈரோடு மாவட்டத்தில்,109 டிகிரி செலிசியஸ் கடும் வெப்ப நிலை நில விய நிிலையில்,சுட்டெரிக்கும் வெயி லையும் பொருட்படுத்தாது மக்கள் ஆர்வமுடன் வாக்களித்ததே இதற்கு காரணமாகும்.

மாலை 6 மணி வரை நடைபெற்ற வாக்குப்பதிவுமுடிந்து,வாக்குச்சாவடிகளின் நுழைவு வாயில்களை போலீ சார் பூட்டினர். பின்னர் அனைத்து அரசியல் கட்சி, வாக்கு சாவடி முகவர் கள் முன்னிலையில், தேர்தல் அலுவ லர்களால்,வாக்குப்பதிவு நடைபெற்ற, மின்னணு இயந்திரங்கள்,சீல் வைக்க ப் பட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு டன், நீலகிரி நாடாளுமன்ற தொகுதி, வாக்கு எண்ணும் மையமான, உதக மண்டலம் அரசினர் பல் தொழிட்நுட்ப கல்லூரிக்கு நேற்று இரவு கொண்டு செல்லப்பட்டது.

தமிழகத்தில்,அமைதியாகநடந்துமுடிந்த தேர்தலால்,தேர்தல் பரபரப்பு மற் றும் சூடு பிடித்த அரசியல் தேர்தல் களம் நேற்றுடன் முடிவுக்கு வந்தது. நேற்று நடந்த வாக்குப்பதிவின் போது ,பவானிசாகர் சட்டமன்ற தொகுதியில் தமிழகம்,குஜராத், ஆந்திரா, கேரளா, கர்நாடக மாநில போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


(இரவு 8.45 மணி நிலவரப்படி)



Previous Post Next Post