எம்பி ஆன பிறகாவது அனைத்து கிராமத்துக்கும் வாங்க என்று சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம் வேட்பாளர்களுக்கு வேண்டுகோள்

எம்பி ஆன பிறகாவது அனைத்து கிராமத்துக்கும் வாங்க என்று சமூக ஆர்வலர்  அ.அப்பர்சுந்தரம் வேட்பாளர்களுக்கு வேண்டுகோள் 

பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற பிறகாவது அனைத்து கிராமங்களுக்கும் வாருங்கள் என்று சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களுக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.பாராளுமன்றத் தேர்தல் வருகின்ற 19ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் நடைபெறுவதால் ஒவ்வொரு தொகுதியிலும் வேட்பாளர்கள் அனைத்து கிராம பகுதிகளுக்கும் செல்ல முடியாமல் தவித்து வருகிறார்கள். குறுகிய கால இடைவெளியில் தேர்தல் நடைபெறுவதால் ஒவ்வொரு பாராளுமன்ற தொகுதியிலும் குறைந்தது 6 சட்டமன்ற தொகுதிகளில் உள்ள சுமார் 2000 பூத் வாக்குச்சாவடி மையங்களைச் சார்ந்த  குறைந்தது சுமார் 15 லட்சம் வாக்காளர்களை சந்திக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. நேரமின்மை காரணமாக வேட்பாளர்கள் வாக்காளர்களை சந்திக்க கிராம ஊராட்சிகளில் உள்ள தெருத் தெருவாக கூட செல்ல முடியாத    நிலை ஏற்பட்டு வேகவேகமாக அவசர அவசரமாக மக்களிடம்  பிரச்சாரம் செய்து கொண்டே பேசுவதற்கு கூட     முடியாமல் கும்பிட்டுக் கொண்டே அனைத்து வேட்பாளர்களும் செல்லும் பரிதாப  நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள்.  ஆகவே வேட்பாளர்களை வாக்காளர்கள் கடந்த காலங்களைப் போல அல்லாமல்  ஊடகங்கள் சமூக வலைதளங்கள் போன்றவற்றின் மூலம் எளிதில் காணப்படுகின்ற இந்த காலகட்டசூழலில் காலநேரம் கருதி வேட்பாளர்களை வற்புறுத்தாமல் அவர்களின் நிலையை உணர்ந்து அவர்களின் பயணத்திட்டம் தடைபடாமல் இருக்கும் அளவிற்கு சூழ்நிலையை உருவாக்கித் தர வேண்டும். மேலும் வெற்றி பெற்ற பிறகு ஐந்து ஆண்டுகள் இருப்பதனால் தொடர்ந்து கிராமங்களுக்கு செல்லுகின்ற போக்கை ஒவ்வொரு பாராளுமன்ற உறுப்பினர்களும் நிச்சயம் ஏற்படுத்திக் கொண்டு வாக்களித்த மக்களை மறந்து விடாமல் கிராமங்களுக்கு செல்லுகின்ற பொழுது மட்டுமே அவர்களுடைய குறைகளை கண்டறிந்து தீர்க்க முடியும். கடந்த காலங்களில் நன்றி சொல்ல கூட பல எம்பிக்கள் தொகுதி பக்கம் செல்லவில்லை என்பது உறுதி. 2024 வது அப்படிப்பட்ட குறைகளை எல்லாம் செய்யாமல் தொகுதி பக்கம் அடிக்கடி சென்று மக்களுக்கும் மக்கள் பிரதிகளுக்கும் இடையே ஒரு நெருக்கமும் பாசமும் ஏற்படுத்திட வேண்டும். அவ்வாறு அடிக்கடி கிராமங்களுக்கு சென்று வந்த எம்பிகளால் மட்டுமே எவ்வித அச்சமும் தயக்கமும் இன்றி தற்பொழுது வாக்கு சேகரிக்க செல்ல முடிகின்றது என்பதையும் காண முடிகின்றது. ஆகவே நேரம் காலம் கருதி வாக்காளர்களும் வேட்பாளர்களுக்கு உதவ வேண்டும். வெற்றி பெற்ற பிறகு பாராளுமன்ற உறுப்பினர்களும் வாக்காளர்களை மறந்து விடக்கூடாது. அதிகமான நேரம் தொகுதியிலும் அங்கே உள்ள கிராமங்களிலுமே செலவிட வேண்டும் என்பது அனைவரின் தொடர் எதிர்பார்ப்பாகும். செய்வார்களா காலம் தான் பதில் சொல்லும் என்றும் பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற பிறகாவது அனைத்து கிராமங்களுக்கும் வாருங்கள் என்று சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்
Previous Post Next Post