பூத் சிலிப்பை மட்டும் வைத்துவாக்களிக்க முடியாது" - தூத்துக்குடி ஆட்சியர் லட்சுமிபதி தகவல்


 "பூத் சிலிப்பை மட்டும் வைத்துவாக்களிக்க முடியாது" - தூத்துக்குடி ஆட்சியர் லட்சுமிபதி தகவல்

வாக்காளர்கள் பூத் சிலிப்பினை மட்டும் வைத்து வாக்களிக்க இயலாது, வாக்காளர் அடையாள அட்டை அல்லது இந்திய தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ள 12 மாற்று ஆவணங்களை கொண்டு வாக்களிக்கலாம் என்று தேர்தல் நடத்தும் அலுவலர் /  மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில், "தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதிக்கு 19.04.2024 நாளன்று பாராளுமன்ற பொது தேர்தல் நடைபெறவுள்ளது. இத்தேர்தலில் தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் 28 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். வாக்குப்பதிவு 19.04.2024 அன்று காலை 7 மணிக்கு தொடங்கு மாலை 6 மணி வரை நடைபெறும். 

தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதியில் 260 வாக்குச்சாவடிகளில், 2,10,578 வாக்காளர்களும், தூத்துக்குடி சட்டமன்ற தொகுதியில் 285 வாக்குச்சாவடிகளில் 2,82,026 வாக்காளர்களும், திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதியில் 266 வாக்குச்சாவடிகளில் 2,41,620 வாக்காளர்களும், ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற தொகுதியில் 265 வாக்குச்சாவடிகளில் 2,24,018 வாக்காளர்களும், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதியில் 262 வாக்குச்சாவடிகளில் 2,45,340 வாக்காளர்களும், கோவில்பட்டி சட்டமன்ற தொகுதியில் 286 வாக்குச்சாவடிகளில் 2,54,848 வாக்காளர்களும், ஆக மொத்தம் 1,624 வாக்குச்சாவடிகளில் 14,58,430 வாக்காளர்கள் இத்தேர்தலில் வாக்களிக்கவுள்ளனர்.

மேற்கண்ட வாக்காளர்கள் வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களிக்க ஏதுவாக வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மூலம் 13.04.2024 முதல் பூத் சிலிப் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. நாளது முடிய தூத்துக்குடி மாவட்டத்தில் மொத்தமுள்ள 14,58,430 வாக்காளர்களில் 91.53 சதவீகிதம் அதாவது 13,34,935 வாக்காளர்களுக்கு பூத் சிலிப் வழங்கப்பட்டுள்ளது. பூத் சிலிப் கிடைக்கப்பெறாத நபர்கள் வாக்களித்திட ஏதுவாக சம்பந்தப்பட்ட அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மூலம் பூத் சிலிப் விநியோகம் செய்திட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

வாக்காளர்கள் மேற்கண்ட பூத் சிலிப்பினை மட்டும் வைத்து வாக்களிக்க இயலாது, வாக்காளர் அடையாள அட்டை அல்லது இந்திய தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ள 12 மாற்று ஆவணங்களை கொண்டு வாக்களிக்கலாம். வாக்காளர் அடையாள அட்டை கைவசம் இருந்து வாக்காளர் பட்டியலில் பெயர் இடம்பெறாமல் இருந்தால் வாக்களிக்க இயலாது, வாக்காளர் பட்டியலில் பெயர் இடம்பெற்றுள்ள வாக்காளர்கள் மட்டுமே வாக்களிக்க இயலும்.

தூத்துக்குடி மாவட்டத்திற்குட்பட்ட 1624 வாக்குச்சாவடிகளிலும் வாக்காளர்களுக்கான அடிப்படை வசதியான குடிதண்;ணீர் வசதி, கழிப்பிட வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும் மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க வசதியாக அனைத்து வாக்குச்சாவடிகளிலும் சாய்வுதளவசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது, 

மேலும் மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் அதிகம் உள்ள வாக்குச்சாவடிகளில் அவர்களுக்கு உதவிபுரிய பணியாளர்கள் மற்றும் சக்கர நாற்காலி வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் தமிழகத்தில் வாக்குப்பதிவு நாளன்று வெப்ப அலை வீசும் என தெரிவித்துள்ளதால், அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வாக்காளர்கள் பாதுகாப்பாக வாக்களித்திட பந்தல் வசதி, பொது சுகாதாரத்துறை மூலம் உப்புக்கரைசல் பொடி மற்றும் மருத்துவ வசதி ஆகியவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் பதட்டமான மற்றும் பாதிக்கப்படக்கூடிய வாக்கச்சாவடிகளாக கண்டறியப்பட்ட 288 வாக்குச்சாவடிகள் அமைந்துள்ள 265 மையங்களுக்கு நுண்பார்வையாளர்கள் நியமனம் செய்யப்பட்டு வாக்குப்பதிவினை கண்காணிக்காணிக்கும் பணியில் ஈடுபடவுள்ளனர், 

மேலும் மேற்கண்ட 288 வாக்குச்சாவடிகள் உட்பட விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதியில் 169 வாக்குச்சாவடிகளிலும், தூத்துக்குடி சட்டமன்ற தொகுதியில் 186 வாக்குச்சாவடிகளிலும், திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதியில் 173 வாக்குச்சாவடிகளிலும்,  ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற தொகுதியில் 172 வாக்குச்சாவடிகளிலும்,  ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதியில் 170 வாக்குச்சாவடிகளிலும்,, கோவில்பட்டி சட்டமன்ற தொகுதியில் 187 வாக்குச்சாவடிகளிலும்   ஆக மொத்தம் 1057 வாக்குச்சாவடிகளில் (65 மூ சாக்குச்சாவடிகளில்) வெப்கேமிரா வசதி ஏற்படுத்தப்பட்டு வாக்குப்பதிவு முழுவதும் பதிவு செய்து, கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

வாக்குப்பதிவு முடிவடையும் நேரமான மாலை 6 மணிக்கு வாக்குபதிவு செய்திட வரிசையில் நிற்கும் அனைத்து வாக்காளர்களுக்கும் டோக்கன் விநியோகம் செய்து வாக்களித்திட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.  வாக்குப்பதிவு முடிவுற்றவுடன் தேர்தலில் பயன்படுத்தபட்ட அனைத்து வாக்குபதிவு இயந்திரங்களும் தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியின் வாக்கு எண்ணிக்கை மையமான வ.உ.சி பொறியியல் கல்லூரியில் வேட்பாளர்கள் / பரதிநிதிகள் முன்னிலையில் பாதுகாப்பாக இருப்பு வைக்கப்படவுள்ளது.

தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்காளர்கள் அனைவரும் தங்களின் ஓட்டுரிமையை நிலை நாட்டும் வகையிலும், ஜனநாயக கடமையினை நிறைவேற்றும் விதமாகவும் 100மூ வாக்களித்திட வேண்டும் என தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் / மாவட்ட ஆட்சித் தலைவர் கோ.லட்சுமிபதி,   தெரிவித்துள்ளார்.

Previous Post Next Post