முதல்வர் ரங்கசாமிக்கு புதுச்சேரி மாநில மக்கள் முன்னேற்ற கழகத்தின் சேர்மன் ஆர்.எல் வெங்கட்டராமன் கேள்வி ?

புதுவையில் செல்வாக்கு மிக்க ரங்கசாமி மோடியிடம் மண்டியிடுவது ஏன்? பெஸ்ட் புதுச்சேரி வாக்குறுதி என்னாச்சி? புதுச்சேரி மாநில மக்கள் முன்னேற்ற கழகத்தின் சேர்மன் ஆர்.எல் வெங்கட்டராமன் கேள்வி ?

புதுச்சேரியில் மக்கள் செல்வாக்கு உள்ளவர் நண்பர் ரங்கசாமி அவர்கள். புதுவையில் NR காங்கிரஸ் ஒரு வலிமையான கட்சி. அதனால் தான் பிரதமர் மோடி அவர்கள் ரங்கசாமியின்  மூலம் புதுவையில் பிஜேபி கால் பதிக்க நினைத்து NR  உடன் கூட்டணியை ஏற்படுத்தினார். ரங்கசாமியும் மத்தியிலும் மாநிலத்திலும் ஒரே கட்சி  ஆட்சி செய்தால் மக்களுக்கு நல்லது செய்ய முடியும் என்ற நம்பிக்கையில், புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து பெறுவதற்கும் , பெஸ்ட் புதுச்சேரி யாக மாற்றுவதற்காகத்தான் பிஜேபி யுடன் கூட்டணி அமைத்துள்ளேன் என்று வாக்குறுதி அளித்து இருந்தார். இதுவரைக்கும் நடந்தது சரி. வெற்றி பெற்று ஆட்சி அமைத்தவுடன் NR காங்கிரஸ்  சட்டமன்ற உறுப்பினர்களும் ,தொண்டர்களும் மிகுந்த மகிழ்ச்சியில் இருந்தனர். ஆனால் மத்திய அரசு NR  என்கிற புலியை முதல்வர் என்கிற புலி கூண்டில் அடைத்து விட்டு , மத்திய அரசு, ரங்கசாமியை தலையாட்டி பொம்மையாக உருவாக்கி அவரை வழி நடத்தி சென்றது. அதன் விளைவாக ஆட்சியில்  பேரவை தலைவர் உட்பட முக்கிய அமைச்ர்கள் பதவியையும் ரங்கசாமி பிஜேபிக்கு தாரை வார்த்து கொடுத்தார். தொடர்நிலையாக முதல்வர் உடல்நிலை சரியில்லாமல் மருத்துவ மனையில் இருந்த போது மூன்று நியமன எம்.எல்.ஏக்களையும் நியமிக்கும் அதிகாரத்தை பிஜேபி யே கையில் எடுத்துக்கொண்டது.இதனால் NR சட்டமன்ற உறுப்பினர்களும் , தொண்டர்களும் அதிர்ச்சியில் உறைந்தனர். அதற்குள் புதுச்சேரியில் இருந்து தேர்ந்தெடுக்கப்படும் ராஜ்ய சபா உறுப்பினர் பதவியையும்   பிஜேபி எடுத்துக்கொண்டது. இதற்கும் ரங்கசாமி மவுனம் காத்து வந்தார். இது NR சட்டமன்ற உறுப்பினர்களிடமும், தொண்டர்களிடமும் குழப்பத்தை ஏற்படுத்தியது. மேலும் மக்களவை தேர்தலிலும் பிஜேபிக்கு ரங்கசாமி விட்டுகொடுத்துவிட்டார்.  இதனை NR சட்டமன்ற உறுப்பினர்களும், தொண்டர்களும் , புதுவை மக்களும்  தங்களுக்கு ஏற்பட்ட அவமானமாகவே கருதுகின்றனர். இதனால் ரங்கசாமியும் வெளியில் சொல்லமுடியாமல் விழி பிதுங்கி நிற்கிறார். அதைவிட கொடுமை , முதல்வர் என்றும் பாராமல் மைக் பிரச்சாரம் செய்து வேட்பாளருடன் வாக்கு சேகரிக்க அனுப்பி வைத்ததுதான். எந்த ஒரு கட்சியின் சார்பாக வேட்பாளர் போட்டியிட்டாலும் வாக்கு சேகரிக்க அந்த கட்சியின் தலைவர்தான் போக வேண்டும். மாறாக ஒரு முதல்வரை வாக்கு சேகரிக்க பிஜேபி அனுப்பு கிறது என்றால் இதில் ஏதோ உள்நோக்கம் இருப்பதை NR சட்டமன்ற உறுப்பினர்களும் , தொண்டர்களும் இப்பொழுதுதான் உணர்கிறார்கள். அப்பொழுது ரங்கசாமி NR கட்சி தலைவரா  பிஜேபி கட்சி தலைவரா என்று கேட்க ஆரம்பித்து விட்டார்கள் .ஆனால் ரங்கசாமி அனைத்தும். புரிந்தும் புரியாதது போல் இருக்கிறார். முதல்வர்  நாற்காலிக்காக ரங்கசாமி மோடிக்கு அடிபணிந்து இருப்பதை  NR  தொண்டர்களும், மக்களும் அவரை வெறுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கின்றார்கள்.
நமது பிஜேபி வேட்பாளர் நமச்சிவாயம் வெற்றி பெற்றால் மாநில அந்தஸ்து பெற்று தருவேன் என்றும் ரேஷன் கடைகள் திறப்பேன் என்று கூறுவது மூன்று வருடமாக ஒரே வகுப்பில் படித்து தேர்ச்சிபெறாதவன் அடுத்த வருடம் கண்டிப்பாக தேர்ச்சி.பெற்று விடுவேன் என்று கூறுவது போல் உள்ளது. இந்த விஷயத்தில் ரங்கசாமி மக்களை முட்டாளாக நினைப்பது கண்டிக்கப்பட.வேண்டிய விஷயம் ஆகும்.புதிய கல்வி கொள்கையை திணிப்பது, மின்துறையை தனியாருக்கு தாரை வார்ப்பது , GST யின் மூலம் மக்களை வாட்டியது , மக்களின் மீது கடன் சுமையை திணிப்பது, ரெஸ்டோ பார்கள், மதுபான தொழிற்சாலைகளை திறந்தும் , கஞ்சாவிற்பணையை கட்டுப்படுத்தாமல், புதுவை மக்களை மயக்கத்தில் ஆழ்த்தி வாக்குகளை பெற்று  வெற்றி பெற்று விடலாம் என்கிற எண்ணம் என்றுமே நிறைவேறாது. முதல்வர் என்னும் மயக்கத்திலிருந்து ரங்கசாமி தெளிந்து ,மோடியிடம் அடிபணிவதை விட்டு புதுவை மக்களை காப்பதற்கு உண்டான வழியை  தேட வேண்டுமே ஒழிய, முதல்வர் நற்காலிக்காக மக்களை ஏமாற்றும் வித்தை இனி மக்களிடையே எடுபடாது என்றும் , கண் கெட்டபபிறகு சூரிய நமஸ்காரம் செய்வது ஏற்புடையது அல்ல. பாராளுமன்ற தேர்தலுக்கு பிறகு மத்தியில் எந்த ஆட்சி அமைத்தாலும் புதுவையில் ஆட்சி மாற்றம் நிச்சயம் ஏற்படும் என்பதை இதன் மூலம் தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு தனது அறிக்கையில் தெரிவித்து உள்ளார் 
Previous Post Next Post